இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் பிரபல அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ். இவர் கொல்கத்தா அணியின் இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று, கவுதம் கம்பீர், வாசிம் அக்ரம் இருவரும் தான் என்னுடைய குருக்கள் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய குல்தீப், ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நான் விளையாட தொடங்கிய காலத்தில் எங்கள் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தார். அவர் போட்டியின் போதும், போட்டி முடிந்த பிறகும் என்னிடம் நிறைய விஷயங்கள் பேசுவார்.
நம் அணியின் கேப்டன் நமக்கு நெருக்கமானவர் என்றால், அன்றைய போட்டியில் நமது மீதே அனைவரது கவனம் இருக்கும். அது எனக்கு மிகவும் பக்கபலமாக அமைந்தது, இருந்தாலும் நான் எனது ஆட்டத்திலும் சிற்பாகவே செயல்பட்டேன்.
அதேபோல்தான் வாசிம் அக்ரமும் என்னிடம் நிறைய விஷயங்கள் பகிர்ந்துள்ளார். ஆனால் அவர் ஒருபோதும் எனது பந்துவீச்சு குறித்து என்னிடம் பேசியது கிடையாது. மாறாக ஆட்டத்தில் எப்படி செயல்படலாம், அதற்கான வழிகள் என்னென்ன, அதனை எப்படி சரிசெய்வது உள்ளிட்டவைகள் குறித்தே அதிகம் பேசியுள்ளார்.
மேலும் இந்த இருவருமே எனது மதிப்புமிக்க வீரர்கள். அதனாலேயே நான் இவர்களை எனது குருக்களாக எண்ணுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் குல்தீப் யாதவ் 39 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’பெங்களூருவை விட்டு வெளியேறமாட்டேன்' - கோலி பிடிவாதம்!