கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்பதற்காக எட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றனர்.
அங்கு அனைத்து அணி வீரர்கள் மற்றும் அணியின் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் வலுக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட வேண்டுமென அணி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து உரிமையாளர்கள் கூறுகையில், ‘பிசிசிஐ எப்போது அட்டவணையை வெளியிடுவார்கள் என்பது கடவுளுக்கு தான் தெரியும். ஆனால் அட்டவணையை வைத்து நாங்கள் திட்டமிட வேண்டியிருப்பதால், பிசிசிஐ அதனை உடனடியாக வெளியிட வேண்டுமென’ கோரிக்கை வைத்துள்ளோம்.
இதையும் படிங்க:'கோலியை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்' - ஜேம்ஸ் ஆண்டர்சன்!