டெண்டுல்கர், கங்குலி, லட்சுமண் ஆகியோர் ஒரே நேரத்தில் கிரிக்கெட் தொடர்பான அமைப்பில் இரட்டைப் பதவி வகிப்பதாக சர்ச்சை கிளம்பியதையடுத்து, இந்தியக் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுவின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான கமிட்டி, இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்ய நியமித்தது.
அதன்படி, தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெறும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் கபில்தேவ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நேர்காணலில் டாம் மூடி, ராபின் சிங், லால்சந்த் ராஜ்பூட், பை சிம்மன்ஸ், மைக் ஹேசன், ரவி சாஸ்திரி ஆகியோர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹேசன் இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலில் பங்கேற்க இன்று மும்பை வந்தடைந்தார்.