தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சுரியனில் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் ஆட பணித்தது.
அதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டி காக் நிலைத்து ஆடி அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினார்.
அவர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி காக் 95 ரன்கலில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் என்ற மரியாதையான ஸ்கோரை எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் பிலாண்டர் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்பின் 103 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி வேண்டர் டௌசென், பிலாண்டரின் சிறப்பான ஆட்டத்தால் 272 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் அதிரடியாக விளையாடி 84 ரன்களை சேர்த்தார். அதன்பின் ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் ஜோ ரூட் 48 ரன்னில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பினர். இதனால் இங்கிலாந்து அணி 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர் காகிசோ ரபடா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்
-
🚨 SOUTH AFRICA WIN 🚨
— ICC (@ICC) December 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
How impressed have you been with their performance in the first Test?#SAvENG pic.twitter.com/KR4x5fHw8g
">🚨 SOUTH AFRICA WIN 🚨
— ICC (@ICC) December 29, 2019
How impressed have you been with their performance in the first Test?#SAvENG pic.twitter.com/KR4x5fHw8g🚨 SOUTH AFRICA WIN 🚨
— ICC (@ICC) December 29, 2019
How impressed have you been with their performance in the first Test?#SAvENG pic.twitter.com/KR4x5fHw8g
இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் வகிக்கிறது. இப்போட்டியில் 95 ரன்கள் விளாசிய குவிண்டன் டி காக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: தடையிலிருந்து காப்பாற்றுங்கள்... இம்ரான் கானின் உதவியை நாடும் பாக். கிரிக்கெட் வீரர்