ETV Bharat / sports

சர்ச்சை வழக்கில் சிக்கிய யுவராஜ்: 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு! - ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் யுஷ்வேந்திர சாஹலின் சாதி குறித்து விமர்சித்தது தொடர்பாக அளிக்கப்பட்டப் புகாரில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது காவல் துறையினர் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FIR against Yuvraj Singh over controversial remarks on Chahal

author img

By

Published : Feb 15, 2021, 12:43 PM IST

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரோஹித் சர்மாவுடன் இணைந்து யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் உரையாடும் நிகழ்ச்சியின்போது பேசிய யுவராஜ் சிங், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சாஹல் வெளியிட்ட டிக்டாக் வீடியோ குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசினார்.

அதில், சாஹல் சார்ந்திருக்கும் சாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் அக்காணொலி சமூக வலைதளங்களிலும் வைரலானது.

இதையடுத்து, ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர்வலரும், வழக்கறிஞருமான ராஜத் கல்சான் என்பவர் நேற்று (பிப்.14) ஹிசார் நகர காவல் நிலையத்தில், யுவராஜ் சிங் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், சாஹல் குறித்து சாதி ரீதியாகப் பேசிய யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஹிசார் காவல் துறையினர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153, 153ஏ, 295, 505 ஆகிய பிரிவுகளிலும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1), 3 (1எஸ்) ஆகிய பிரிவுகள் என மொத்தம் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, இந்தச் சம்பவம் நடந்தபோது, சமூக வலைதளங்களில் யுவராஜ் மீது கடுமையான எதிர்ப்பு பதிவானது. இதைத்தொடர்ந்து யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புகோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Pak vs SA: பாபர், ரிஸ்வான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.