ETV Bharat / sports

மும்பை கிளப் கிரிக்கெட்டருக்கு சேவாக் சொன்ன குட்டிக் கதை! - வாசிம் ஜாஃபர்

”அணியிலிருந்து கழற்றிவிடப்படும்போது எல்லாம் எனது உழைப்பையும் நம்பிக்கையும் விட்டுவிடவில்லை. அதேபோல் தான் நீயும் வாழ்க்கையில் நம்பிக்கையையும், முயற்சியையும் கைவிடக் கூடாது”

financial-help-support-pour-in-for-ailing-mumbai-cricketer-aslam-shaikh

author img

By

Published : May 22, 2020, 6:56 PM IST

மும்பை கிளப் கிரிக்கெட்டரான அஸ்லாம் சேக் என்பவர் நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்காக மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேல் சிகிச்சைக்காகப் பணமின்றி தவித்து வந்தார்.

இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் கூடுதல் செயலாளர் பிவி ஷெட்டி பேசுகையில், ''அஸ்லாமின் உடல்நிலையில் உள்ள பிரச்னைகள் பற்றி யாரும் எங்களிடம் சொல்லவில்லை. இரண்டு நாள்களுக்கு முன்பாகத்தான் எனக்கு தெரியவந்தது. நிச்சயம் அவருக்கு உதவி செய்யப்படும்'' என்றார்.

இந்தச் செய்தி தனியார் செய்தி நாளிதழ்களில் வெளிவர, முன்னாள் இந்நாள் கிரிக்கெட்டர்கள் பலரும் அஸ்லாமிற்கு உதவிசெய்ய முன்வந்துள்ளனர். அதில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக், அஸ்லாமிற்காக ஒரு குட்டிக் கதை ஒன்றை வீடியோவில் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், ''நான் எப்படி விடாமுயற்சியுடன் இருந்தேன் என்பதைப் பற்றி உனக்கு ஒரு கதை சொல்கிறேன். நான் முதல்முதலாக 1999ஆம் ஆண்டு இந்தியா அணியில் அறிமுகமானேன். ஒரே ஒரு ஆட்டம், அதன்பின் அணியிலிருந்து வெளியேற்றினார்கள். மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகியன.

அந்த நேரத்தில் எப்போதும் எனது முயற்சியையும் நம்பிக்கையையும் கைவிடவில்லை. ஒருவேளை நான் நம்பிக்கையை இழந்திருந்தால், மீண்டும் இந்திய அணிக்கு ஆடியிருக்க மாட்டேன். 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்திய அணிக்குள் வந்தேன். அங்கிருந்து 6 ஆண்டுகள் இந்திய அணிக்காகத் தொடர்ந்து ஆடினேன்.

திடீரென 2006-07ஆம் ஆண்டின்போது மீண்டும் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டேன். ஆனால், மீண்டும் இந்திய அணிக்குள் வந்தேன். அப்போது முச்சதம், இரட்டை சதம், சதம் என விளாசித் தள்ளினேன். அணியிலிருந்து கழற்றிவிடப்படும்போது எல்லாம் எனது உழைப்பையும் நம்பிக்கையும் விட்டுவிடவில்லை. அதேபோல் தான் நீயும் வாழ்க்கையில் நம்பிக்கையையும், முயற்சியையும் கைவிடக் கூடாது'' என்றார்.

இதற்குப் பதிலளித்த அஸ்லாம், ''வாழ்வில் போராடுவதற்கு கிரிக்கெட் உங்களுக்கு கற்றுக்கொடுத்தது. அதே கிரிக்கெட் தான் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்தது. அனைவருக்கும் நன்றி. எல்லோரின் அன்பாலும் நெகிழ்ந்துள்ளேன். நிச்சயம் போராடுவேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பிரச்னை வெளியே வந்ததையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே ஆகியோர் நிதி உதவி செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அந்த பந்தில் சச்சின் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்த்தேன்: அக்தரின் ஃபேன் பாய் மொமண்ட்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.