இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக வலம் வருபவர் அஜிங்கியா ரஹானே. இவர் கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவினால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பங்கேற்ற ரஹானே, இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னை அவரது சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஹானே, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்னை, இங்கிலாந்து மண்ணில் எதிர்கொள்வது என்பது சவாலான காரியம். ஏனெனில் இங்கிலாந்தில் அவருடைய பந்துவீச்சை சமாளிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் கரோனாவல் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ரஹானே கூறுகையில், ‘நிச்சயமாக இது மிகவும் வருத்தமளிக்ககூடிய சூழ்நிலை தான். ஆனால் நாம இதனை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது கிடைத்துள்ள தருணத்தை நான் எனது ஆறு வயது மகளுடனும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடப் பயன்படுத்தி வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: ரஹிமைத் தொடர்ந்து பேட்டை ஏலத்தில் விற்கும் ஷாகிப்!