ETV Bharat / sports

அந்த நாள் அந்த வீரருடையதாக இருந்தால்... குல்தீப் யாதவ் பேட்டி! - கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ்

ஒவ்வொரு வீரருக்கும் ஒருநாள் அமையும். அந்த நாள் அந்த வீரருடையது என்றால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என, குல்தீப் யாதவ் பேட்டியளித்துள்ளார்.

exclusive-interview-kuldeep-yadav-opens-up-about-preparation-ahead-of-ipl-13

author img

By

Published : Aug 22, 2020, 4:36 PM IST

ஐபிஎல் 13 சீசன் தொடரில் பங்கேற்பதற்காக, எட்டு அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கிவிட்டனர். வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில், தற்போது வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் செப்.19ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

இதனாலேயே ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஈ டிவி பாரத் செய்திகளுக்குப் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். கரோனா நாள்கள், ஐபிஎல் 13 சீசன், ஃபிட்னெஸ் என, பல விஷயங்களை நம்மோடு அவர் பகிர்ந்துள்ளார்.

இந்தியா உள்பட உலக நாடுகள் ஊரடங்கிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் உணர்வு எப்படி உள்ளது?

கரோனா சூழல் ஒவ்வொருவருக்கும் கடினமானது தான். சாதாரண மக்கள் பலர் பெரும் துன்பங்களை சந்தித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் பாதுகாப்பாக இருந்தேன். எனது உடல்நிலையை நன்றாக பேணி காத்துள்ளேன். வீட்டிலேயே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. பந்துவீச்சு பயிற்சியை தான் அதிகமாக மிஸ் செய்தேன்.

உங்களின் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்?

இதுபோன்ற சூழல்களில் அனைவரும் தங்களின் உணவில் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். எனது பயிற்சியாளர் என் சிறுவயதின்போது, உணவைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். அப்போதிருந்து நான் கட்டுப்பாடாக உள்ளேன். காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி. கிரிக்கெட் இல்லாத நாள்களில் என் உடற்தகுதியில் இன்னும் அதிகமாக அக்கறை கொள்ள முடிந்தது.

ஐபிஎல் 13 சீசனுக்கான பயிற்சிகள் எந்தளவில் உள்ளன?

இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தவிர்த்து, வேறு எந்த வீரர்களுமே கிரிக்கெட் விளையாடவில்லை. நீண்ட நாள்களாக கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. நான் ஃபார்மில் இருக்கிறேனா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தத் தொடர் நல்ல முறையில் அமையும் என்று தோன்றுகிறது.

கடந்த சீசன் உங்களுக்கு சரியாக அமையவில்லை. அதனால் ஏதேனும் பிரஷரை உணர்கிறீர்களா?

கிரிக்கெட் விளையாட்டில் பிரஷர் என்று எதுவும் இல்லை. எல்லா போட்டிகளிலும், 5 விக்கெட்டுகள் எடுக்கவோ, சதம் விளாசவோ முடியாது. கிரிக்கெட்டர்களின் கிராஃப் சில ஏற்ற இறக்கங்களுடன் தான் இருக்கும். உலகின் எந்த கிரிக்கெட்டர்களின் கேரியரும் ஒரே நிலையில் இருந்ததில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொயின் அலி ஆட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து எவ்வாறு வெளிவந்தீர்கள்?

ஓவ்வொரு வீரருக்கும் ஒரு நாள் அமையும். அந்த நாளில் அவர்கள் 100 அல்லது 200 ரன்கள் கூட சேர்ப்பர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு சரியாக அமையவில்லை. விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. ரன்களும் அதிகமாக விட்டுக் கொடுத்தேன். அதனால் அந்த நேரம் கொஞ்சம் எமோஷனலாக அமைந்துவிட்டது.

இதையும் படிங்க: ஓய்வு முடிவு குறித்து அறிவித்த பின்ச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.