மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த மாதம் தொடங்கவிருப்பதால், அதற்குத் தயாராகும்விதமாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 மகளிர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்வுமன்கள் எமி ஜோன்ஸ், டேனியல் வையட், நட்டாலியா சேவியர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய வில்சன் தனது பங்கிற்கு 39 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அணியின் கேப்டன் ஹீதர் நைட் 78 ரன்களையும், வில்சன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி அதிரடியாக விளையாடி அரைசதமடித்தார். ஆனால் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அந்த அணி தோல்வியை நோக்கிச் சென்றது.
இருப்பினும் பத்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய டெலிசா கிம்மின்ஸ், ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என விளாச ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. இதனையடுத்து சூப்பர் ஓவரில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஆலிசா ஹீலி, ஆஷ்லே கார்டினர் விக்கெட் இழப்பின்றி எட்டு ரன்களை மட்டுமே எடுத்தனர்.
-
England win it!
— ICC (@ICC) February 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Captain Heather Knight finishes it with back-to-back boundaries. What a match!#AUSvENG pic.twitter.com/k7yR7iPlOP
">England win it!
— ICC (@ICC) February 1, 2020
Captain Heather Knight finishes it with back-to-back boundaries. What a match!#AUSvENG pic.twitter.com/k7yR7iPlOPEngland win it!
— ICC (@ICC) February 1, 2020
Captain Heather Knight finishes it with back-to-back boundaries. What a match!#AUSvENG pic.twitter.com/k7yR7iPlOP
பின் ஒன்பது ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஹீதர் நைட் ஓவரின் மூன்றாவது, நான்காவது பந்தினை பவுண்டரிக்கு விளாசி இங்கிலாந்து அணிக்கு வெற்றிபெற்றுத்தந்தார். சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த ஹீதர் நைட் ஆட்டநாயகியாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்க்கும் டாமினிக் தீம்!