இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பட்லர் 38 ரன்களிலும், போப் 62 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டில் பிராட் 29 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக யாசிர் ஷா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களிலேயே முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய ஷான் மசூத், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் பாபர் அஸாம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் அதிரடியான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாக், அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி 244 ரன்கள் முன்னிலையுடன் இன்றைய நாளைத் தொடங்கவுள்ளது.
-
An inspired display with the ball by England has put the game back in the balance at the end of day three in Manchester.#ENGvPAK REPORT 👇 https://t.co/gcBHrmeV0R pic.twitter.com/8lUg10Fs2v
— ICC (@ICC) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An inspired display with the ball by England has put the game back in the balance at the end of day three in Manchester.#ENGvPAK REPORT 👇 https://t.co/gcBHrmeV0R pic.twitter.com/8lUg10Fs2v
— ICC (@ICC) August 7, 2020An inspired display with the ball by England has put the game back in the balance at the end of day three in Manchester.#ENGvPAK REPORT 👇 https://t.co/gcBHrmeV0R pic.twitter.com/8lUg10Fs2v
— ICC (@ICC) August 7, 2020
தோல்வியின் திசையிலிருந்த இங்கிலாந்து அணிக்கு, துணை கேப்டன் ஸ்டோக்ஸ், ஷான் மசூத் விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கையளித்தார். இதனால் நான்காம் நாள் ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய ஹாக்கி அணி கேப்டன் உள்ளிட்ட நான்கு வீரர்களுக்கு கரோனா