நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டாம் லாதம் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களத்திற்கு வந்த ராஸ் டெய்லர், வாட்லிங், மிட்செல் ஆகியோர் அரைசதமடிக்க மற்ற வீரர்கள் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். முதல் இன்னிங்ஸ் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 375 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. தொடக்க வீரர் டொமினிக்கும், ஜோ டென்லியும் 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவுற்றது. ரோரி பர்ன்ஸ் 24 ரன்களுடனும், ஜோ ரூட் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: தோனி குறித்து வெளிப்படையாக பேசமுடியாது - கங்குலி!