500ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடிவருகிறது. இதன் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்றது. வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து அணி களமிறங்கிய 500ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.
முதல் இன்னிங்ஸில் 499 ரன்கள் குவித்த இங்கிலாந்து:
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 499 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து அணியில் ஓலி போப் 135 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். பென் ஸ்டோக்ஸ் 120 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேஷவ் மகராஜ் ஐந்து, ரபாடா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஒரு ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா:
இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 82.5 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 28 பந்துகளில் ஒரேயொரு ரன் மட்டும் அடித்து நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால், 86.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டி காக் 63 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி சார்பில் டோமினிக் பெஸ் ஐந்து விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஜோ ரூட் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா:
இதைத்தொடர்ந்து, 290 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் தங்களது தடுப்பாட்டத்தால் டிரா செய்துவிடம் என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனிடையே ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் கூட ஆட்டம் டிராவில் முடியும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் சுழற்பந்துவீச்சில் சிக்கிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 88. 5 ஓவர்களில் 237 ரன்களுக்கு சுருண்டது.
தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக இடதுகை சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மகராஜ் 71 ரன்கள் அடித்தார். ஜோ ரூட் நான்கு விக்கெட்டுகளும், மார்க் வுட் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அந்நிய மண்ணில் 150ஆவது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து:
தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
-
150th away Test win for England 👏 #SAvENG pic.twitter.com/xbHOxFhbjl
— ICC (@ICC) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">150th away Test win for England 👏 #SAvENG pic.twitter.com/xbHOxFhbjl
— ICC (@ICC) January 20, 2020150th away Test win for England 👏 #SAvENG pic.twitter.com/xbHOxFhbjl
— ICC (@ICC) January 20, 2020
இந்த போட்டியின்மூலம், இங்கிலாந்து அணி வெளிநாட்டு மண்ணில் தங்களது 150ஆவது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதுவரை வெளிநாட்டு மண்ணில் 500 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய இங்கிலாந்து 150 வெற்றிகளையும், 182 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: 'நீ விதைத்த வினையெல்லாம்'... ஆஷஸ் மூலம் இங்கிலாந்துக்கு புது மொழி!