தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளைடவுள்ளது. இத்தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒருநாள், டி20 போட்டிகளுக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில், உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்காக இறுதிவரை போராடி கோப்பையைப் பெற்றுக்கொடுத்த பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்தின் ஒருநாள் அணியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அணியில் ஆர்ச்சர், பட்லர், மார்க் வுட் ஆகியோரையும் ஒருநாள் தொடரிலிருந்து விலக்கியுள்ளது. ஆனால் இந்த நட்சத்திர வீரர்கள் இங்கிலாந்து டி20 அணியில் இடம்பிடித்துள்ளர்.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகிவருவதால் அவர்களுக்கு தென்ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அதேபோல் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் லியம் பிளங்கட்டுக்கு இரு தொடர்களிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி விவரம்:
-
The #CWC19 winners have named their first ODI squad since that amazing day at Lord's.
— ICC (@ICC) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
See who made the squad 👇 pic.twitter.com/QtJKP270Gz
">The #CWC19 winners have named their first ODI squad since that amazing day at Lord's.
— ICC (@ICC) December 13, 2019
See who made the squad 👇 pic.twitter.com/QtJKP270GzThe #CWC19 winners have named their first ODI squad since that amazing day at Lord's.
— ICC (@ICC) December 13, 2019
See who made the squad 👇 pic.twitter.com/QtJKP270Gz
இங்கிலாந்து ஒருநாள் அணி: இயன் மோர்கன் (கே), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் பான்டன், பேட் பிரௌன், சாம் கரண், டாம் கரண், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டன், முகமது, டேவிட் மாலன், பர்கின்சன், அடில் ராஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ்.
-
And here is the England squad for the T20I leg of the tour. pic.twitter.com/NDuvSGpCVy
— ICC (@ICC) December 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And here is the England squad for the T20I leg of the tour. pic.twitter.com/NDuvSGpCVy
— ICC (@ICC) December 13, 2019And here is the England squad for the T20I leg of the tour. pic.twitter.com/NDuvSGpCVy
— ICC (@ICC) December 13, 2019
இங்கிலாந்து டி20 அணி: இயன் மோர்கன் (கே), ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பேட் பிரௌன், சாம் கரண், டாம் கரண், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டன், டேவிட் மாலன், பர்கின்சன், அடில் ராஷித், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.
இதையும் படிங்க:ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் வெளியீடு!