தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
-
4️⃣ 4️⃣ 4️⃣ 6️⃣ 6️⃣ 4️⃣byes
— ICC (@ICC) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Absolute carnage from Keshav Maharaj in Joe Root's 29th over 🤯 #SAvENG pic.twitter.com/nLf4CfxoPj
">4️⃣ 4️⃣ 4️⃣ 6️⃣ 6️⃣ 4️⃣byes
— ICC (@ICC) January 20, 2020
Absolute carnage from Keshav Maharaj in Joe Root's 29th over 🤯 #SAvENG pic.twitter.com/nLf4CfxoPj4️⃣ 4️⃣ 4️⃣ 6️⃣ 6️⃣ 4️⃣byes
— ICC (@ICC) January 20, 2020
Absolute carnage from Keshav Maharaj in Joe Root's 29th over 🤯 #SAvENG pic.twitter.com/nLf4CfxoPj
அதன்படி, டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். இவர் கேசவ் மஹாராஜிற்கு வீசிய ஓவரின்போது முதல் மூன்று பந்துகளை பவுண்டரிக்கும், அடுத்த இரு பந்துகளை சிக்சருக்கும் அனுப்பினார். இதையடுத்து கடைசி பந்தில் 4 ரன்கள் பைஸ் செல்ல, அந்த ஓவரில் 28 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதனால் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஒரே ஓவரில் ரன்கள் கொடுத்த வீரர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சன், இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஆகியோரோடு முதலிடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலின் இரண்டாம் இடத்தில் இந்தியாவின் ஹர்பஜன் சிங்கும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் யூனிஸ் கானும் உள்ளனர்.
இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளிலிருந்து டூ ப்ளஸிஸ் ஓய்வு