NZvENG: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் காஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து அணி நிர்வாகம் கூறுகையில், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியில் காஃப் இணைவார் என்றும், இவர் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வூட்டின் பழைய டீம் மெட்டும் ஆவார்’ எனத் தெரிவித்துள்ளது.
காஃபின் நியமனம் குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கூறுகையில், காஃப் சக அணி வீரர் மட்டுமல்லாமல் எனது நெருங்கிய நண்பர். இவரின் அணுபவமும், அறிவும் இங்கிலாந்து அணிக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும் என்றார்.
-
Welcome @DGoughie! 👋
— England Cricket (@englandcricket) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Welcome @DGoughie! 👋
— England Cricket (@englandcricket) October 30, 2019Welcome @DGoughie! 👋
— England Cricket (@englandcricket) October 30, 2019
டேரன் காஃப் இங்கிலாந்து அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். மேலும், இவர் 1996ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு தொடரை வென்றுகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:#NZvsENG2019: காயம் காரணமாக அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல் - ரசிகர்கள் சோகம்!