இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் இரண்டாம் போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சாக் கிராலே, ஆர்ச்சருக்கு பதிலாக சாம் கரண் ஆகியோர் இடம்பெற்றனர். பாகிஸ்தான் அணியில் ஷடாப் கானுக்கு பதிலாக ஃபவாட் ஆலம் இடம்பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் ஷான் மசூத் - அபித் அலி இணை ஆட்டத்தைத் தொடங்கியது. கடந்த போட்டியில் சதம் விளாசிய ஷான் மசூத், இந்தப் போட்டியில் ஒரு ரன் எடுத்து வெளியேறினார். இதையடுத்து கேப்டன் அசார் அலி களமிறங்கி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
23ஆவது ஓவரின்போது ஆட்டத்தில் மழை குறுக்கிட, ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அசார் அலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் பாபர் அசாம் - அபித் அலி இணை பாகிஸ்தான் அணி ஸ்கோரை உயர்த்தியது.
சிறப்பாக ஆடிய அபித் அலி அரைசதம் கடந்து ஆடினார். தொடர்ந்து ஆடிய இவர் 60 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அசாத் 5 ரன்களிலும், ஃபவாட் ஆலம் ரன் ஏதும் எடுக்காமலும் நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 120 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டத்தில் 45.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதனால் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 25 ரன்களுடனும், ரிஸ்வான் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
-
💥 Masood lbw Anderson
— ICC (@ICC) August 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
💥 Azhar c Burns b Anderson
Jimmy Anderson has claimed both wickets to fall so far today 💪 #ENGvPAKpic.twitter.com/eBQptPT5L0
">💥 Masood lbw Anderson
— ICC (@ICC) August 13, 2020
💥 Azhar c Burns b Anderson
Jimmy Anderson has claimed both wickets to fall so far today 💪 #ENGvPAKpic.twitter.com/eBQptPT5L0💥 Masood lbw Anderson
— ICC (@ICC) August 13, 2020
💥 Azhar c Burns b Anderson
Jimmy Anderson has claimed both wickets to fall so far today 💪 #ENGvPAKpic.twitter.com/eBQptPT5L0
இங்கிலாந்து அணி சார்பாக ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், பிராடு, வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடருக்கு முன்னதாக காரோனாவிலிருந்து மீண்ட கருண் நாயர்!