இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்து விளையாடியது. அதில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக போட்டி நடுவர்கள் குற்றஞ்சாட்டினர். இது ஐசிசி ஒழுங்கு நடத்தை விதி 2.22 படி குற்றமாகும்.
இதையடுத்து, பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு ஊதியத்தை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மூன்றாவது டி20 போட்டியின் போது பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடரை வெல்வது யார்? வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா vs இங்கிலாந்து!