ETV Bharat / sports

"எமோஷனலா இருக்கு, ஆனா எந்த வருத்தமும் இல்ல" - ஓய்வு குறித்து மனம் திறக்கும் ஹாமில்டன் மசகட்சா #HamiltonMasakadza

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன்  ஹாமில்டன் மசகட்சா மனம் திறந்துள்ளார்.

Hamilton Mazakadza
author img

By

Published : Sep 21, 2019, 9:19 PM IST

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூத்த வீரராகத் திகழ்ந்தவர் ஹாமில்டன் மசகட்சா. 2001இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 17 தான். இதையடுத்து, தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயதிலேயே (17 வயது 254 நாட்கள் ) சதம் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

Hamilton Mazakadza
இறுதிப் போட்டியில் 71 ரன்கள் அடித்த ஹாமில்டன் மசகட்சா

பின்னர், அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் போட்டியில் முதல்முறையாக என்ட்ரி கொடுத்தார். மூன்று விதமான ஃபார்மெட்டுக்கும் ஏற்றவாறு பேட்டிங் செய்யும் திறன் படைத்தவர், மசகட்சா. ஓப்பனிங் வீரரான இவர் தனது சிறப்பான பேட்டிங் மூலம், ஜிம்பாப்வே அணிக்கு குறிப்பிட்ட பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

Hamilton Mazakadza
செல்லப் பெயருடன் தனது கடைசி டி20யில் பங்கேற்ற மசகட்சா

இந்நிலையில், வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரோடு தான் ஓய்வு பெறுவதாக மசகட்சா அறிவித்திருந்தார். முன்னதாக, அரசின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்ததால் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு ஐசிசி இடைக்காலத் தடை விதித்த பிறகு, பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும். இதையடுத்து, நேற்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணி - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5ஆவது லீக் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில், ஹாமில்டன் மசகட்சா தனது செல்லப்பெயரான முதுரா பெயர் பொறித்த ஜெர்சியில் களமிறங்கினார்.

Hamilton Mazakadza
"காட் ஆஃப் ஹானர்" பெற்ற ஹாமில்டன் மசகட்சா

பின்னர், கடைசியாக பேட்டிங் செய்ய வந்த மசகட்சாவுக்கு ஜிம்பாப்வே வீரர்கள் "காட் ஆஃப் ஹானர்’' தந்து கெளரவப்படுத்தினர். இதையடுத்து, 156 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில், கேப்டன் மசகட்சா சிறப்பாகப் பேட்டிங் செய்தார். எதிர்கொண்ட 42 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஐந்து சிக்சர்கள் என 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது அற்புதமான ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், ஜிம்பாப்வே வீரர்கள் இவரது கடைசிப் போட்டியில் வெற்றிபெற்று மசகட்சாவுக்கு பிரியா விடைகொடுத்துள்ளனர்.

ஓய்வுக் குறித்து மசகட்சா பேசுகையில்,

"எனது கடைசிப் போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது, ஜிம்பாப்வே வீரர்கள் 'காட் ஆப் ஹானர்' வழங்கியது எனக்கு மகிவும் ஸ்பெஷலாக இருந்தது. என் மனதிற்குள் உணர்ச்சிப்பூர்வமான விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், என் முடிவில் எந்த வித வருத்தமும் இல்லை. நான் ஓய்வு பெற்றதன்மூலம், அணியில் பல இளம் வீரர்களுக்கான கதவுகள் திறக்கப்படவுள்ளன. ஜிம்பாப்வே அணியில் குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவதற்கு திறமையான வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். எங்களது அணியில் சிறந்த அனுபவசாலிகள் நிறையபேர் உள்ளனர்.

Hamilton Mazakadza
மசகட்சாவின் ஆட்டத்தைப் பாராட்டிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி

என்னுடைய இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை முதல்முறையாக நாங்கள் வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜிம்பாப்வே அணி என்னிடமிருந்து எதிர்பார்த்த தேவைகளை நான் பூர்த்தி செய்துள்ளது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, எனது கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை நாங்கள் முதல்முறையாக டி20 போட்டியில் வீழ்த்தியது எனக்கு திருப்திகரமாக உள்ளது" என்றார்.

ஜிம்பாப்வே அணிக்காக இவர் அடித்த ரன்கள்:

ஃபார்மெட் போட்டிகள் ரன்கள் சதம் அரைசதம் அதிக ரன்கள்
டெஸ்ட் 38 2222 5 8 158
ஒருநாள் 209 5658 5 34 178
டி20 65 1600 0 10 93

இதையும் படிங்க: பல அணிகளுக்கு அதிர்ச்சியளித்த ஜிம்பாப்வேவுக்கே பேரதிர்ச்சி!

Intro:Body:

Ireland Vs Scotland Match Report

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.