சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்று, தற்போது சீனாவில் குறைந்துவிட்டாலும் இத்தாலி, கனடா, அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் மிக வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தடுக்க அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவிட்-19 வைரஸ் தொற்றை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. இதனிடையே, சமூக வலைதளங்களில் மாட்டின் கோமியத்தைக் குடித்தால் கரோனா வைரஸ் தொற்று வராது போன்ற வதந்திகள் கரோனா வைரஸை விட வேகமாகப் பரவிவருகின்றன.
-
It’s very important that we understand the need of social isolation to break the chain, don’t spread information from unreliable sources, don’t ignore the health advisories & for sure follow the hygiene measures.#coronavirus pic.twitter.com/F0IgIB8rhx
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It’s very important that we understand the need of social isolation to break the chain, don’t spread information from unreliable sources, don’t ignore the health advisories & for sure follow the hygiene measures.#coronavirus pic.twitter.com/F0IgIB8rhx
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 16, 2020It’s very important that we understand the need of social isolation to break the chain, don’t spread information from unreliable sources, don’t ignore the health advisories & for sure follow the hygiene measures.#coronavirus pic.twitter.com/F0IgIB8rhx
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 16, 2020
இந்நிலையில், ரசிகர்களால் சின்ன தல என அழைக்கப்படும் இந்திய வீரரும், சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா கரோனா வைரஸ் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுகொண்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "கரோனா வைரஸ் பரவால் இருக்க தனிமைப்படுத்தப்படுவதின் அவசியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேசமயம், தவறான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி மக்களை அச்சுறுத்த வேண்டாம். அனைவரும் சுகாதாரத் துறை அறிவுறித்தியபடி சுத்தமாக இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
கரோனா வைரஸால் மார்ச் 29 தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15க்கு மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா வைரஸால் மக்கள், வீரர்களின் நலன் கருதி சிஎஸ்கே வீரர்களின் பயிற்சி ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவின் தீவிரத்தை சென்னை உணர மறுக்கிறது... எச்சரிக்கும் அஷ்வின்!