ETV Bharat / sports

மோர்டசாவின் இடத்தை நிரப்புவது கடினம்: வங்கதேச கேப்டன் தமீம் இக்பால்! - தமீம் இக்பால்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மோர்டசாவின் இடத்தை நிரப்புவது கடினம் என அந்த அணியின் புதிய கேப்டன் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.

difficult-to-fill-mortazas-shoes-says-new-bangladeshs-skipper-tamim-iqbal

author img

By

Published : Mar 15, 2020, 3:06 PM IST

மார்ச் 8ஆம் தேதி வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மோர்டசா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து வங்கதேச அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக தமீம் இக்பால் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமீம் இக்பால், ''மோர்டசா எப்போதும் எனக்கு மிகவும், நெருங்கிய நண்பர். இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறோம். அவர் என்ன யோசிப்பார் என்பதை நிச்சயம் என்னால் கணிக்க முடியும். ஆனால் அவர் மேற்கொண்ட கேப்டன்சி பணியை நிரப்புவது எளிதல்ல. அவரிடமிருந்து அனைத்து நல்ல விஷயங்களையும் எடுத்துக்கொள்கிறேன். நான் கிரிக்கெட்டில் ஏதாவது கடினமாகக் கருதினால், என்னுடைய முதல் அழைப்பு அவருக்கு தான் செல்லும்.

வங்கதேச கிரிக்கெட்டில் சில விஷயங்களை முன்னேற்ற விரும்புகிறேன். அதற்கு உடனடியாக முடிவு கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் சில மாற்றங்களை அனைவரும் உணர்வார்கள். நாங்கள் களத்தில் செய்யும் தவறுகளைக் குறைக்க முயற்சிப்போம். வீரர்களுடன் களத்திற்கு வெளியே சில விஷயங்கள் மாற்றமடையும் என நினைக்கிறேன்'' என்றார்.

வங்கதேச அணியின் கேப்டனாக 88 போட்டிகளில் ஆடியுள்ள மோர்டசா, இதுவரை 50 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் போட்டிகளில் மாற்றம் நிகழும் - கங்குலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.