ETV Bharat / sports

ரெய்னா இடத்தில் தோனி...  சிஎஸ்கே விற்கு ஐடியா கொடுக்கும் கம்பீர்! - ஐபிஎல் 2020

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மூன்றாமிடத்தில் களமிறங்கி விளையாட வேண்டுமென, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dhoni should bat at number 3 for CSK this year: Gambhir

author img

By

Published : Sep 1, 2020, 3:36 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்பதற்காக 8 அணிகளை சேர்ந்த வீரர்கள் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றனர்.

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகி சொந்த ஊர் திரும்பினார். இதையடுத்து, சிஎஸ்கே அணியில் மூன்றாமிடத்தில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி பலரது மனதில் எழத் தொடங்கியது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கம்பீர், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மூன்றாமிடத்தில் களமிறங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் கடந்த ஓராண்டாக எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் உள்ளார். அவர் மூன்றாமிடத்தில் களமிறங்கினால் அதிக பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிஎஸ்கேவில் முடிவிற்கு வருகிறதா ‘சின்ன தல’ இன் ஆட்டம்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.