ETV Bharat / sports

தோனி, ரோஹித்தால் மட்டுமே கோலி தப்பித்து வருகிறார்! - இந்திய கேப்டன் விராட் கோலி

அகமதாபாத்: தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோரால் இந்திய கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சி திறமையின் குறைபாடுகள் வெளிப்படாமல் உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

கம்பீர்
author img

By

Published : Sep 20, 2019, 1:14 PM IST

சமீப காலமாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்திய அணியில் மட்டுமல்லாமல், நிர்வாகத்திலும் சர்வ வல்லமை பொருந்திய ஆளுமையாக மாறி வருகிறார். பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடுவதால் அவர் பற்றிய விமர்சனங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. இதேபோல் தான் விராட் கோலி கேப்டன்சியிலும் பல சாதனைகளை படைக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதால், வெளிநாட்டு தொடர்களில் அதிக போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இது இந்திய ரசிகர்களிடையே யார் சிறந்த கேப்டன் என பல விவாதங்களை எழுப்பியது.

தோனி
தோனி

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர், உலகக்கோப்பைத் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி அணியை சிறப்பாக வழிநடத்தினார். ஆனால் விராட் கோலி கேப்டன்சியில் இன்னும் பல மைல்களைக் கடக்க வேண்டும். இப்போது இந்திய அணியை விராட் சிறப்பாக வழிநடத்துவதற்கு தோனி, ரோஹித் ஷர்மா அகியோர் முக்கிய காரணமாக இருக்கின்றனர். இவர்கள் இருவரும் விராட் கோலி கேப்டன்சியில் இருக்கும் குறைகளை எளிதாக சரி செய்கின்றனர். இதனால் விராட் கோலி கேப்டன்சி குறித்து கேள்வி எழாமல் உள்ளது.

ரோஹித்
ரோஹித்

விராட் கோலிக்கு கேப்டன்சி திறன் சிறப்பாக உள்ளது என்றால் ஏன் ஐபிஎல் தொடரின்போது ஆர்சிபி கோப்பையை கைப்பற்றாமல் உள்ளது. அதேபோல் மறுபக்கம் ரோஹித், தோனி ஆகியோர் வழிநடத்தும் அணியின் சாதனைகளை பார்த்தால் அனைவருக்கும் புரியும். யார் சிறந்த கேப்டன் என...

கோலி
கோலி

மேலும், டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர் வாய்ப்பை தவறவிட்டதாக கருதுகிறேன். தற்போது ரோஹித் ஷர்மாவுக்கான நேரம். ஒருநாள் போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித்தை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Intro:Body:

Nirmala sitharaman

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.