நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்திற்கு கடந்த மாதம் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனையில் பாகிஸ்தானைச் சேர்ந்த எட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்து பயிற்சிபெற தடைவிதிப்பதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், “கிரிக்கெட் வீரர்கள் தங்களது போட்டிகளுக்கு முன்னாள் மேற்கொள்ளும் பயிற்சிகள் மிகவும் அவசியமான ஒன்று. இது அவர்கள் நாட்டை பெருமைப்படுத்து உதவும். நியூசிலாந்து அரசின் சட்டத்திட்டங்களை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம்.
ஏனெனில் அவை பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் அவர்களின் சில விதிமுறைகள் எங்களின் விளையாட்டு வீரர்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதித்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை.
ஆனலும் எங்களுக்குப் போட்டிக்கு முன்னதாக இரண்டு நாள்கள் பயிற்சியை மேற்கொண்டாலும், எங்களால் தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட், டி20 தொடரை ஒரு சவாலாக ஏற்று அதனைச் செய்து முடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:AUS vs IND: பேட்டிங்கில் அசத்திய தவான், கோலி; டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!