கிரிக்கெட் வரலாற்றின் அடுத்த பரிமானமான டி10 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அபிதாபியில் நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி, திசாரா பெரேரா தலைமையிலான பங்களா டைகர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பங்களா அணி காெலின் இங்கிராம், ரோஸ்ஸோ அதிரடியால் 10 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 108 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கோலின் இங்கிராம் 37 ரன்களையும், ரோஸ்ஸோ 26 ரன்களையும் எடுத்தனர். டெக்கான் அணி சார்பில் பிரிட்டோரியஸ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து 109 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்கான் அணியில் கேப்டன் வாட்சன் மற்றும் தேவ்சிச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய வாட்சன் 25 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்சர்களை விளாசி 41 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் டெக்கான் அணி 9.5 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
-
Deccan Gladiators clinch their first victory of 'Aldar Properties Abu Dhabi T10' by 6 wickets! #AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #aldarproperties #DeccanGladiators #BanglaTigers pic.twitter.com/43Da5wG1R4
— T10 League (@T10League) November 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deccan Gladiators clinch their first victory of 'Aldar Properties Abu Dhabi T10' by 6 wickets! #AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #aldarproperties #DeccanGladiators #BanglaTigers pic.twitter.com/43Da5wG1R4
— T10 League (@T10League) November 16, 2019Deccan Gladiators clinch their first victory of 'Aldar Properties Abu Dhabi T10' by 6 wickets! #AbuDhabiT10 #t10league #t10season3 #inAbuDhabi #aldarproperties #DeccanGladiators #BanglaTigers pic.twitter.com/43Da5wG1R4
— T10 League (@T10League) November 16, 2019
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பெறச் செய்த வாட்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: டி10 லீக்: டெக்கானை பந்தாடிய டெல்லி புல்ஸ் அசத்தல் வெற்றி!