கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோரும் உயிரிழந்து உள்ளனர். இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், தனது மகள் ஐவி மேவுடன் இணைந்து, பிரபல பாலிவுட் பாடலான ’ஷீலா கி ஜவானி’ என்ற பாடலுக்கு நடனமாடிய காணொலியை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், 'இந்தி ரசிகர்கள் என்னிடம் கேட்டது போல் உங்களுக்காக ஒன்று. எனக்கு யாரேனும் உதவுங்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.
-
Super dude Beautiful and small #Angel 😇 cute dress India style 😍😍😍 more..... Want Indian people's always support 🙏🙏🙏 #davidwarner god bless you and ur family 👪 #StayHomeStaySafe #StayHome @TikTok_IN #TikTokForIndia pic.twitter.com/4azZg4zEM4
— மகிழ்ச்சி 😎 (@Satu_paiyan) April 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Super dude Beautiful and small #Angel 😇 cute dress India style 😍😍😍 more..... Want Indian people's always support 🙏🙏🙏 #davidwarner god bless you and ur family 👪 #StayHomeStaySafe #StayHome @TikTok_IN #TikTokForIndia pic.twitter.com/4azZg4zEM4
— மகிழ்ச்சி 😎 (@Satu_paiyan) April 18, 2020Super dude Beautiful and small #Angel 😇 cute dress India style 😍😍😍 more..... Want Indian people's always support 🙏🙏🙏 #davidwarner god bless you and ur family 👪 #StayHomeStaySafe #StayHome @TikTok_IN #TikTokForIndia pic.twitter.com/4azZg4zEM4
— மகிழ்ச்சி 😎 (@Satu_paiyan) April 18, 2020
இதற்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது மகனுடன் இணைந்து 'டாடி கூல்' என்ற பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய காணொலியை, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டிருந்தார்.
தற்போது அதற்குப் போட்டியாக டேவிட் வார்னர் வெளியிட்ட, தனது மகளுடன் நடனமாடும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுகிறார். மேலும் கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோர் நெருக்கடி கொடுத்தனர் - ஃபெர்னாண்டினோ