இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையே நேற்று மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதில், 256 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் வார்னர் 112 பந்துகளில் 17 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 128 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் 24ஆவது சதம் இதுவாகும்.
இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் வேகமாக 5,000 ரன்களைக் கடந்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை வார்னர் தனது 115ஆவது இன்னிங்ஸில் படைத்துள்ளார். இது மட்டுமல்லாது சர்வதேச அளவில் இச்சாதனையை புரியும் நான்காவது வீரர் என்ற பெருமையையும் அவர் அடைந்துள்ளார்.
சர்வதேச அளவில் வேகமாக 5000 ரன்களை கடந்த வீரர்கள்:
- ஹசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா) - 101 இன்னிங்ஸ்
- விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 114 இன்னிங்ஸ்
- விராட் கோலி (இந்தியா) - 114 இன்னிங்ஸ
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 115 இன்னிங்ஸ்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 116 இன்னிங்ஸ்
இதையும் படிங்க: 14 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியின் மோசமான தோல்வி... கோலி சொன்ன காரணம் என்ன?