தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் (சிஎஸ்ஏ) சார்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில், 2020-21ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் வீரர்/வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க ஆடவர் அணிக்கு 16 வீரர்களும், மகளிர் அணிக்கு 14 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. மாறாக அந்த அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ரிக்ஸ் (Beuran Hendricks) முதல் முறையாகத் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து சிஎஸ்ஏ தலைமை நிர்வாகி ஜாக்யூஸ் பால் கூறுகையில், நாங்கள் இந்தாண்டிற்கான ஆடவர் அணியைச் சேர்ந்த 16 வீரர்களையும், மகளிர் அணியைச் சேர்ந்த 14 வீராங்கனைகளையும் தேர்வு செய்துள்ளோம். மேலும் இந்த வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளனர் என்று தெரிவித்தார்.
-
CSA contracted Proteas women’s players: Trisha Chetty , Nadine de Klerk, Mignon du Preez, Shabnim Ismail, Sinalo Jafta, Marizanne Kapp, Ayabonga Khaka, Masabata Klaas, Lizelle Lee, Sune Luus, Zintle Mali, Tumi Sekhukhune, Chloe Tryon, Dane van Niekerk, Laura Wolvaardt. pic.twitter.com/4VaCyKZNmA
— Cricket South Africa (@OfficialCSA) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">CSA contracted Proteas women’s players: Trisha Chetty , Nadine de Klerk, Mignon du Preez, Shabnim Ismail, Sinalo Jafta, Marizanne Kapp, Ayabonga Khaka, Masabata Klaas, Lizelle Lee, Sune Luus, Zintle Mali, Tumi Sekhukhune, Chloe Tryon, Dane van Niekerk, Laura Wolvaardt. pic.twitter.com/4VaCyKZNmA
— Cricket South Africa (@OfficialCSA) March 23, 2020CSA contracted Proteas women’s players: Trisha Chetty , Nadine de Klerk, Mignon du Preez, Shabnim Ismail, Sinalo Jafta, Marizanne Kapp, Ayabonga Khaka, Masabata Klaas, Lizelle Lee, Sune Luus, Zintle Mali, Tumi Sekhukhune, Chloe Tryon, Dane van Niekerk, Laura Wolvaardt. pic.twitter.com/4VaCyKZNmA
— Cricket South Africa (@OfficialCSA) March 23, 2020
ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆண்கள் அணியினர்: டெம்பா பவுமா, டி காக், டு பிளெசிஸ், டீன் எல்கர், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகாராஜ், மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ் , ரஸ்ஸி வான் டெர் டுசென்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட பெண்கள் அணியினர்: த்ரிஷா செட்டி, நாடின் டி கிளார்க், மிக்னான் டு ப்ரீஸ், ஷப்னிம் இஸ்மாயில், சினலோ ஜப்தா, மரிசேன் காப், அயபோங்கா காக்கா, மசபாட்டா கிளாஸ், லிசெல்லே லீ, சூனே லூஸ், துமி சேகுகுனே, சோலி ட்ரையன், டேன் வான் நீகெர்க், லாரா வால்வார்ட்.
இதையும் படிங்க:'அவங்கள பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்' - கடுப்பான கவுதம் கம்பிர்