உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40ஆவது லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம் பெற்றுள்ளார். கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்திக் களமிறங்குகிறார்.
அணிகள் பின்வருமாறு
இந்திய அணி: கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி(கே), ரிஷப் பந்த், தினேஷ் கார்திக், எம்.எஸ்.தோனி, ஹர்த்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முஹாமது சமி, சகல், ஜாஸ்ப்ரிட் பும்ரா.
வங்கதேசம்: தமிம் இஃபால், லிட்டன் தாஸ், சஹிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், செளமியா சர்கார், சப்பிர் ரஹ்மான், மொசட்டேக் ஹொசைன், மொஹமது சைஃபுதின், ருபெல் ஹொசைன், மஷ்ரஃப் மொர்டஷா(கே), முஷ்டபிசூர் ரஹ்மன்.