ETV Bharat / sports

வாழ்வா சாவா ஆட்டம்; நியூசிலாந்தை பந்தாடிய இங்கிலாந்து! - Eng vs NZ

வாழ்வா சாவா ஆட்டத்தில் நியூசிலாந்தை 186 ரன்னுக்கு சுருட்டி 119 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று அரையிறுதிக்குள் காலடி எடுத்து வைத்தது.

வெற்றிக் களிப்பில் இங்கிலாந்து
author img

By

Published : Jul 3, 2019, 11:43 PM IST

உலகக்கோப்பைத் தொடரின் 41 வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்குள் செல்ல முடியும் என்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் இருந்தே ராயும் பேர்ஸ்டோவும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பேர்ஸ்டோ அதிரடியாக ஆடி சதமடித்தார். ராயும் தன் பங்கிற்கு 66 ரன்கள் அடித்தார்.

அதன்பின் வந்த இங்கிலாந்து வீர்ரகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் அணியின் ஸ்கோர் குறைவானது. முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணித் தரப்பில் போல்ட், ஹென்றி மற்றும் நீசம் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

305 ரன் என்ற எளிய இலக்கை ஆட வந்த நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்தின் துல்லிய பந்துவீச்சுத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விரைவிலே ஆட்டமிழந்தனர். டாம் லதம் மட்டும் 57 ரன்கள் அடித்து ஆறுதலளித்தார். சிறப்பாக பந்து வீசிய மார்க் வுட் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஒரு வழியாக போராடி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.