ETV Bharat / sports

ரசிகர்களை குழப்பும் முயற்சியில் இறங்கிய சிஎஸ்கே - பதில் கண்டுபிடித்து அசத்திய ரசிகர்கள்! - ரசிகர்களை குழப்பும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை குழப்பும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

CSK twitter
author img

By

Published : Nov 21, 2019, 3:48 PM IST

அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள 13ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு இப்போதிலிருந்தே அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ஏலத்திற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை தற்போது வெளியேற்றியுள்ளன. அந்த வரிசையில் ஐபிஎல் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது பங்கிற்கு ஐந்து வீரர்களை ஏலத்திற்கு முன்பாகவே வெளியேற்றியது.

அந்த வரிசையில் மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, துருவ் சோரே, சைத்தன்யா ஆகியோரை வெளியேற்றியது. அதன் பின் தற்போது 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நீடிக்கவுள்ள 20 வீரர்களின் விவரங்களை சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிராக வெளியிட்டுள்ளது.

அதன் படி சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் ’இது 20ஆவது மற்றும் 2020ஆம் ஆண்டிற்கான முதல் இருபது’ என பதிவிட்டு கூடவே இருபது எண்களைப் பதிவிட்டதுள்ளது. ஏனெனில் சில ஜெர்ஸி நம்பர்களை சூசகமாக சென்னை அணி வெளியிட்டுள்ளதாக ரசிகர்கள் நினைக்கின்றனர்.அந்த வகையில் சிஎஸ்கேவின் ட்விட்டர் பக்கத்திற்கு ரசிகர்கள் ஏறக்குறைய பதில் களை கண்டுபிடித்து விட்டனர்.

அதாவது வீரர்களின் ஜெர்சி நம்பர்கள் முறையே 1.முரளி விஜய், 2.மோனு குமார், 3. ரெய்னா, 7. தோனி, 8. ஜடேஜா, 9. ராயுடு, 13. டு பிளேசிஸ், 17. ருத்ராஜ் கெய்க்வாட், 22. நிகிடி, 24.கே.எம்.ஆசிப். 27.ஹர்பஜன் சிங்,31. கரண் சர்மா 33.வாட்சன், 47 பிராவோ, 54.ஷர்துல் தாக்கூர், 74. சாண்ட்னர், 81. கேதார் ஜாதவ், 90. தீபக் சஹார், 99. இம்ரான் தாஹிர் என ஜெர்சி என்களின் வரிசையை வைத்து ரசிகர்கள் உறுதிசெய்து விட்டனர்.

ஆனால் இப்போது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய விஷயம் ஜெர்சி எண் 12 என்பது தான். ஏனேனில் இதுவரை ஜெர்சி எண் 12 எந்த சிஎஸ்கே வீரரும் உபயோகித்ததில்லை. அதனால் 12-ம் நம்பர் ஜெர்சி யாருடையது என ரசிகர்கள் குழம்பி தவித்தனர்.

ஏனெனில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 12ஆம் நம்பர் கொண்ட ஜெர்ஸியை அணிவார். அப்படி என்றால் அவரை ஏலத்தில் எடுக்க போகிறார்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் 12ஆம் நம்பர் ஜெர்ஸி ஜெகதீசன் நாராயணன் என்னும் இளம் வீரருடையது ஆகும்.

சென்னை அணி என்ன தான் தலைமுடியை பிய்த்துக்கொள்ள வைத்தாலும், தாங்கள் புத்திசாலிகள் என அனைவரின் ஜெர்ஸி நம்பர்களையும் சொல்லி ரசிகர்கள் நிரூபித்து விட்டனர். தற்போது சென்னை அணி 20 வீரர்களை அணியில் தக்க வைத்துள்ளது அம்பலமாகிவிட்டது.

இதையும் படிங்க:AUS vs PAK 2019: முதல் நாளிலேயே மூட்டையைக் கட்டிய பாகிஸ்தான்!

Intro:Body:

CSK twitter 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.