ETV Bharat / sports

சிங்கங்கங்களின் வரலாறு விசில் போட ரெடியாகும் ரசிகர்கள் - dhoni

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி கடந்த வந்த பாதையை பற்றி சிறிய தொகுப்பு.

சிஎஸ்கே அணி வீரர்கள்
author img

By

Published : Mar 19, 2019, 8:30 PM IST

Updated : Mar 19, 2019, 8:41 PM IST

இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 12வது சீசன் தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி வந்தாலே, ஏன் அந்த அணியின் பெயரைக் கேட்டாலே பிற அணிகளுக்கு லேசான பயம் வந்து போகும் என்றால் அந்த அணியின் பெயர் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று கூறினால் அது மிகையாகாது. காரணம் அந்த அணி ஆரம்பம் முதல் இன்று வரை செய்யாத சாதனைகள் கிடையாது, தொடாத உயரம் கிடையாது.

2007 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, ஐபிஎல் முதல் தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணியின் நிர்வாகம் வாங்கியது. அவர் தொட்டால் எல்லாம் துளங்கும் என்பார்கள் அது போல் தான், அவர் தலைமை வகித்த சென்னை அணியை முதல் தொடரிலேயே இறுதிப்போட்டிக்கு எடுத்துச் சென்றார்.

அந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆடிய முதல் போட்டியிலேயே 240 ரன்கள் குவித்து டி20 வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியரான மைக் ஹசி 116 ரன்கள் அடித்து அசத்தினார்.

அதன்பின்பு தொடரில் ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே இறுதிப்போட்டி வரை சென்று, கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியிடம் வெற்றியை விட்டுக்கொடுக்க நேரிட்டது. ஆனால் அடுத்த தொடரில் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்க நகருக்கு மாற்றப்பட்டது. அப்போதும், அந்த அணி வெற்றிக்கனியை தொட முடியாமல் அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியது.

அந்த தோல்வியையடுத்து பேட்டியளித்த சென்னை அணியின் கேப்டன் தோனி சற்று தனது வீரர்களை கடிந்து கொண்டார். அவர் பிற அணிகள் போல் நாம் ஊர் சுற்ற வரவில்லை. எனவே அடுத்த சீசன்களில் கோப்பையை வெல்லும் நோக்கில் விளையாட வருமாறு கூறினார்.

அவர் கூறியதைப்போன்று அடுத்த சீசனும் தொடங்கியது. ஆனால் அந்த சீசனில் சிஎஸ்கே அணி சற்று தடுமாற்றத்தையே சந்தித்தது. இறுதிக்கட்டத்தில் அந்த அரையிறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற கட்டாயத்தில் பஞ்சாப் அணியுடன் கடைசி லீக் போட்டியில் களமிறங்கியது. அப்போட்டியில், 192 ரன்களை சேஸ் செய்த சென்னை அணியின் மேல்வரிசை வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி 148 ரன்கள் குவித்த நிலையில் வெற்றி பாதைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த தொடரில் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும், சென்னை அணியை அரையிறுதிக்குள் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் ஆடினர். சிஎஸ்கே வின் விக்கெட்டுகள் விழும்போதெல்லாம் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா போடாத ஆட்டமில்லை.

அவரின் ஆட்டத்திற்கு தோனி தனது பேட்டால் பதில் கொடுத்தால். ஆம் அப்போட்டியில் தான் பலரும் தோனியின் கோபத்தை பார்த்தார்கள். இறுதி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டு சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்ததோடு அரையிறுதிக்குள்ளும் அழைத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி மும்பை அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி தனது முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

அடுத்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே தொடர்ச்சியாக இரண்டாவது கோப்பையை கைப்பற்றி பிற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தது.

அதற்கு அடுத்த மூன்று சீசன்களிலும் பைனலுக்கு முன்னேறிய சிஎஸ்கே கொல்கத்தாவிடம் ஒருமுறையும், மும்பையிடம் இரண்டு முறையும் கோப்பையை நழுவவிட்டது.

சென்னை அணிக்கு மற்றொரு சறுக்கலாக 2015 ஆம் ஆண்டு தொடரில், அந்த அணியின் உரிமையாளர் சூதாட்ட புகாரில் சிக்கியதால் சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த அணி கலைக்கப்பட்டது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் அந்த அணியின் மீது சுமத்தப்பட்டாலும், ரசிகர்கள் சென்னை அணிக்கு துணையாக இருந்து வந்தனர். அடுத்த இரண்டு சீசன்களில் சென்னை அணி விளையடாவிட்டாலும், மைதானங்கள், மற்றும் சமூகவலைதளங்களில் அந்த அணிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

எனினும் அந்த அணியின் வருகையை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு தொடரில் புதிய பொழிவுடன் சென்னை அணி திரும்பியது. அப்போது கூட அணியில் அதிகபடியான சீனியர் வீரர்கள் இடம்பெற்றிருந்ததால் அந்த அணியை ஃபாதர்ஸ் ஆர்மி என சிலர் கலாய்த்தனர்.

ஆனால் அந்த ஃபாதர்ஸ் ஆர்மி மீண்டும் ஒருமுறை கோப்பையை எளிதாக கைப்பற்றி அணியில் இருப்பது ஃபாதர்ஸ் மட்டும் அல்ல கிரிக்கெட்டின் காட் ஃபாதர்ஸ் என்பதை உணரச் செய்தனர்.

சென்னை அணியின் பலம் என்றால் பலவற்றைக் கூறலாம், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடங்கி 11வது வீரரான பவுலர்கள் வரை அனைவரும் தங்களுக்கென தனித்துவம் கொண்டவர்களாக் இருப்பது தான் சிஎஸ்கேவின் மிகப்பெரிய பலம்.

குறிப்பாக கேப்டன் தோனி அணிக்கு தேவை வரும் வேலையில் சரியான வீரர்களை களம் காணச் செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். முதல் தொடரில் 5வது வீரராக களமிறங்கிய மைக் ஹசியை பிற்காலத்தில் ஓப்பனிங் இறங்கச் செய்தார்.

அதே போன்று சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை பவுர்-பிளேயில் பயன்படுத்தி சுழற்பந்துவீச்சாளர்களையும் பவுர்-பிளேயில் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். பிற அணிகளில் விளையாடிய வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு வந்தால் அவர்களுக்குள் ஒழிந்திருக்கும் அதியசத்தை வெளிக்கொண்டு வருவதில் தோனி வல்லமை படைத்தவர்

முதல் இரண்டு சீசன்களில் மும்பை அணியில் ஆடிய பிராவே, சிஎஸ்கே அணிக்கு வந்த பின்பு பேட்டிங், டெத் ஓவர் பவுலிங் என அசத்தியதால் இப்போது வரை அவரை அணி நிர்வாகம் வெளியே விடாமல் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ரெய்னா அந்த அணிக்கு கிடைத்த வரம் தான், இரண்டாவது வீரராக களமிறங்கும் அவர் தொடர்ச்சியாக ரன்குவித்து நல்ல அடித்தளம் அமைத்து தருவார். பல தருணங்களில் சுழற்பந்துவீச்சிலும் அசத்துவார். அவரை சின்ன தல என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் சிஎஸ்கே அணியில் ஆடிய ஒரு வீரர் நிச்சயமாக இந்திய அணியில் இடம்பிடிப்பது வழக்கம். காரணம் அவர்களின் சீரான பெர்பார்மன்ஸ் தான். அதுபோல், பத்ரிநாத், அஸ்வின், முரளி விஜய், மோஹித் சர்மா, பவன் நெகி என பல வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சிஎஸ்கே உதவியுள்ளது. அதுமட்டுமல்லாது அந்த அணியின் கேப்டனான தோனி அவர்களுக்கு தனது அனுபவத்தின் மூலம் அறிவுரைகள் வழங்குவார்.

முதல் தொடரில் இருந்தே சென்னை அணியில் பல சீனியர் வீரர்கள் ஆடி வருகின்றர். ஸ்டீபன் பிளம்மிங், முத்தையா முரளிதரன், ஹேடன், மைக் ஹசி, போலிஞ்சர், பிரண்டன் மெக்கல்லம், நெஹ்ரா, நிட்னி, டுபிளஸ்ஸிஸ், டுவைன் சுமித் உள்ளிட்டோரின் அனுபவங்கள் கூட அந்த அணிக்கு வலு சேர்த்துள்ளது.

சென்னை அணியில் பல ஆல்-ரவுண்டர்களும் இருந்துள்ளனர். ஆல்பி மார்க்கல், ரெய்னா, ஜடேஜா, கேதர் ஜாதவ், என லிஸ்ட் நீண்டு கொண்டே தான் போகிறது.

இதுதவிர புதுமைகளை செய்வதிலும் சென்னை வீரர்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். சென்னை அணியின் ஹேடன் மங்கூஸ் பேட் என்பதை அறிமுகம் செய்து அதிரடியாக ஆடினார். பிராவோ என்று கூறினால் மைதானத்தில் அவர் செய்யும் குறும்புகள் தான் முதலில் நினைவுக்கு வரும். அவரின் நடனத்தை காண்பதற்காகவே பலரும் போட்டியை தவறாமல் பார்ப்பார்கள்.

இறுதியாக நடைபெற்ற தொடரில் மும்பை அணியில் பல ஆண்டுகளாக ஆடிய ராயுடுவும், ஹர்பஜன் சிங்கும் சென்னை அணிக்காக வாங்கப்பட்டனர். அவர்கள் இருவரும் கடந்த சீசனில் கலக்கி சிஎஸ்கேவின் வெற்றி பயணத்திற்கு உதவினர். மும்பை அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்த ராயுடுவை ஓப்பனராக இரங்கச் செய்தனர்.

அவர் தனது நிலையை அறிந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரோடு களமிறங்கிய மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான வாட்சனும் துவம்சம் செய்தார்.

சென்னை அணியின் நிர்வாகம் தங்களது அணியை எப்போதும் பலம் பொருந்திய அணியாக வைப்பதை கருத்தில் கொண்டு தான் அணியை தேர்வு செய்து வருகின்றனர்.

அதேபோன்று தான் இந்த முறையும் தேர்வு செய்துள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த பலரையும் அணி நிர்வாகம் மீண்டும் தேர்வு செய்துள்ளது. அவர்கள் வயதை பார்த்து வீரர்களை தேர்வு செய்வதில்லை, வீரர்களின் திறமையை வைத்தே வாய்ப்பளிக்கின்றனர்.

இந்த தொடருக்கான சென்னை அணியில் இடம்பெற்றுள்ள ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, ரெய்னா, டூபிளஸ்ஸிஸ், தோனி, கேதர் ஜாதவ், முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், என பேட்டிங் ஆர்டர் பலமுள்ளதாக உள்ளது.

பவுலிங்கில் தாக்கூர், ஆசிப், நெகிடி, கரண்சர்மா, சாகர், ஹர்பஜன் ஆகியோரும் உள்ளனர். அதே போன்று பிராவே, டேவிட் வில்லி, ஜடேஜா, வாட்சன், சான்ட்னர், பல ஆல்-ரவுண்டர்களும் உள்ளனர்.

இந்த முறையும் தோனி தலைமையில் களமிறங்கும் யெல்லோ ஆர்மி புதிய சகாப்தம் படைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதற்கு உதாரணமாக சென்னை அணியின் ரசிகர்கள் தற்போது இருந்தே தங்களது கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தை காண்பதற்கே மைதாத்தை நிரப்பி கெத்து காட்டி பிற அணியினர் மத்தியில் கெத்து காட்டினர். முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் போட்டி சிஎஸ்கே வின் சொந்த மைதானத்தில் நடப்பதால் ரசிகர்கள் விசில் போடரெடியாகி கொண்டிருக்கின்றனர்.

Intro:Body:

CSK special story

Conclusion:
Last Updated : Mar 19, 2019, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.