ETV Bharat / sports

ஒளிபரப்பு ஒப்பந்தத்தை மீறியதாக ஆஸி., கிரிக்கெட் வாரியத்தின் மீது புகார்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரின் ஒளிபரப்பு ஒப்பந்தத்தை மீறி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செயல்பட்டதாக ’சேனல் 7’ தொலைக்காட்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

author img

By

Published : Dec 1, 2020, 3:51 PM IST

Cricket Australia 'terrified' of BCCI: Channel 7

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் அப்போட்டி தற்போது முதலாவது டெஸ்ட் போட்டியாக வருகிற டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஒளிபரப்பு ஒப்பந்தத்தை மீறி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் போட்டி அட்டவணையை மாற்றியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மீது ’சேனல் 7’ தொலைக்காட்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

செவன் வெஸ்ட் மீடியா
செவன் வெஸ்ட் மீடியா

இதுகுறித்து செவன் வெஸ்ட் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் வார்பர்டன் கூறுகையில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எங்களை ஒரு ஒளிபரப்பாளராக மதிக்கவில்லை. அவர்கள் பிசிசிஐக்கு பயப்படுவது வெட்கக்கேடானது. அவர்கள் எங்களிடம் ஆலோசிக்காமல் தொடரை மாற்றி அமைத்துள்ளனர். மேலும் எங்களுடனான ஒப்பந்ததையும் அவர்கள் மீறியுள்ளனர். இதனால்தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2021 டி20 உலகக்கோப்பை அரபு அமீரகத்திற்கு மாற்றமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.