உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, ஐரோப்பா நாடுகளான இத்தாலி, ஸ்பெயினில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆஸ்திரேலியாவில் கோவிட் -19 தொற்றால் இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த தொற்று எளிதில் பரவும் என்பதால், பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திகொண்டுள்ளனர். இந்த தருணத்தில் அவர்கள் புத்தகம் படிப்பதிலும், திரைப்படம் பார்ப்பதிலும், உடற்பயிற்சி மேற்கொள்வதிலும் தங்களது பொழுதை கழித்துவருகின்றனர்.
அந்தவகையில், தனிமைப்படுத்துப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தனது வீட்டிலுள்ள கார் நிறுத்தும் இடத்தை உடற்பயிற்சி செய்யும் இடமாக மாற்ற முயற்சித்தார். அப்போது தெருவில் நிறுத்திவைக்கப்பட்ட அவரது காரிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் பர்ஸை (பணப்பையை) திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் இன்று காலை வெளியே சென்று பார்த்து போது எனது கார் கண்ணாடி திறக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அருகில் சென்று பார்த்தபோது காரிலிருந்த எனது பர்ஸ் திருடுபோனது தெரியவந்தது. பர்ஸை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் மெக்டொனால்ட்ஸில் உணவறுந்தியது எனது வங்கி கணக்கிலிருந்து வந்த குறிஞ்செய்தி பார்த்த போது எனக்கு தெரியவந்தது. அவர்கள் பசியில் இருந்ததால் திருடியிருக்கிறார்கள் என நினைக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: டெண்டுல்கர், லாராதான் எனது காலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்கள் - வார்னே