ETV Bharat / sports

ஐபிஎல் 2020: ஐபிஎல் உரிமையாளர்களுடனான கூட்டத்தை நிறுத்திய  பிசிசிஐ! - ஐபிஎல் உரிமையாளர்களுடனான கூட்டத்தை நிறுத்திய பிசிசிஐ

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் 13ஆவது சீசனின் முக்கிய முடிவு இன்று எடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்த நிலையில், அணி உரிமையாளர்களுடனான கூட்டத்தை சில காரணங்களுக்காக பிசிசிஐ நிறுத்தியுள்ளது.

COVID-19: BCCI cancels conference call with IPL franchise owners

author img

By

Published : Mar 25, 2020, 6:58 AM IST

உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தினால், பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவில் இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 தொடரில் 13ஆவது சீசன் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மார்ச் 13ஆம் தேதி பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக ஐபிஎல்லின் இந்த சீசன் நடத்தப்படுமா? என்ற கேள்வி பலரது மனத்திலும் எழத்தொடங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் 2020-இன் வாய்ப்புகள் குறித்தும், ரசிகர்களின் பாதுகாப்புக் காரணங்கள் குறித்தும் விவாதிக்க பிசிசிஐ, ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டம் காணொலி உரையாடல் மூலம் இன்று நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு சில காரணங்களுக்காக ஐபிஎல் உரிமையாளர்களுடனான கூட்டத்தை பிசிசிஐ தற்போது தடைசெய்துள்ளது. மேலும் இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், சில காரணங்களுக்காக 'ஐபிஎல் உரிமையாளர்களுடனான கூட்டம் தற்போது நிறுத்திவைக்கப்படுகிறது. மேலும் அடுத்த கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்திய ரசிகர்களை ஆற்றுப்படுத்திய ’ஸ்ப்ரிங்’ பேட் வதந்திகள்... தொடரும் புதிர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.