கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2020 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 29ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.
வரும் 29ஆம் தேதி தொடங்கும் போட்டித்தொடர் மே மாதம் 24ஆம் தேதி வரை நடைபெறும். இதனிடையே, உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, ஐபிஎல் போட்டிகளையும் பாதிக்குமா என்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்த இந்திய நிர்வாகக் குழு (Indian Governing Council) தலைவர் பிரிஜேஷ் படேல் கூறுகையில், ”கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கு இதுவரை எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இருப்பினும் நாங்கள் நிலைமையை கண்காணித்துவருகிறோம்.” என்றார்.
பிசிசிஐயைச் சேர்ந்த மற்றோரு அலுவலர் இது குறித்து பேசுகையில், "12 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டித்தொடருக்காக தென் ஆப்பிரிக்கா அணி திட்டமிட்டபடி இந்தியா வரும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாசம் வைக்க நேசம் வைக்க... தல தோனியை கட்டித்தழுவிய சின்ன தல ரெய்னா!