டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, ரசிகர்களுக்கு அளித்த தீபாவளி வாழ்த்துச் செய்தியில், “அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும், குடும்பத்தில் அமைதி நிலவட்டும். வீட்டில் அகல் விளக்கு ஏற்றி, இனிப்புகள் பரிமாறி தீபாவளியை கொண்டாடுங்கள். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.
இதற்கு ரசிகர் ஒருவர், “அனுஷ்கா உங்களின் நாயை (விராத் கோலி) கட்டுப்படுத்துங்கள்” என்று கூறியிருந்தார். இதனை சிலர் ட்ரோல் செய்துவருகின்றனர்.
இச்செயலை வன்மையாக கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் உதித் ராஜ், விராத் கோலிக்கு எதிராக வேலை செய்யும் நபர்களை வேலையற்ற வீணர்கள், மடையர்கள், கடைந்தெடுத்த முட்டாள்கள்” எனக் கூறினார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பதிலில், “நாயை விட விசுவாசமான ஒருவரை காணமுடியாது, அனுஷ்கா தனது நாயை கட்டுப்படுத்த தேவையில்லை. பட்டாசுகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நீங்களெல்லாம் இந்த நாட்டில்தான் பிறந்தீர்களா என்பதை கண்டறிய உங்களுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இது, “அனுஷ்காவின் நாய் விராத்கோலி” என்று ட்ரோல் செய்துவரும் நபர்களுக்கு தக்க பதிலடியாய் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு விராத் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 69 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளிலும், நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இதையும் படிங்க: வீட்டில் வெறுமை, இன்ஸ்டாகிராமில் விளையாடும் அனுஷ்கா ஷர்மா