பொதுவாக, விளையாட்டு வீரர்களும் சினிமா நட்சத்திரங்களும் சமூகவலைதளங்களில் பிசியாக இருப்பது வழக்கம். அந்த வகையில், பாலிவுட் நடிகை அலியா பட்டிற்கு சமூகவலைதளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால், இவரை பற்றிய அனைத்து தகவல்களும் சமூக வளைதளவாசிகளுக்கு அத்துப்படி. விசயம் இப்படி இருக்கையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிப்ஸுக்கு மட்டும் இவர் யார் என்று தெரியாமல் போனதுதான் வேடிக்கையாக உள்ளது.

ஆம் கிப்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , காலை பறவைகள் ட்வீட் செய்கின்றன (ட்வீட்டிற்கு குக்கூ என்றும் பொருள்). எனவே நானும் இந்த நாள் உங்களுக்கு நல்லபடியாக அமையட்டும் என்று ட்வீட் செய்கிறேன் என பதிவிட்டார். இதையடுத்து, கிப்ஸின் இந்தப் பதிவுக்கு ட்விட்டர் வலைதளம் லைக் செய்துள்ளது. கிப்ஸ் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக அவர், அலியா பட் இடம்பெற்ற ஹார்டின் ஷிப் ( Heartin GIF) ஒன்றை பதிவிட்டார்.

பொதுவாக, நாம் எந்த மனிநிலையில் இருக்கிறோமோ அதை நடிகர், நடிகை, கார்டூன் காதப்பாத்திரம் வாயிலாக சமூகவலைதளங்களில் நான்கு நொடிகளுக்குள் சுருக்கமாக காணொலி மூலம் சொல்வதுதான் GIF

இதைத்தொடர்ந்து, ரசிகர் ஒருவர் உங்களுக்கு அலியா பட் தெரியுமா என கிப்ஸிடம் கேள்வி கேட்டார். அதற்கு, இந்த GIFஇல் இருக்கும் நபர் யார் என்றே எனக்கு தெரியாது என கிப்ஸ் பதிலளித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அலியாவின் ரசிகர்கள் ட்விட்டரில் கிப்ஸை வறுத்தெடுத்தனர். அதன் பின்பே, ஹார்டின் GIFஇல் இருக்கும் அலியா பட் நடிகை என்பதே அவருக்கு தெரியவந்துள்ளது. பின்னர், அலியா பட் நீங்கள் நடிகை என்று எனக்கு தெரியாது. ஆனால், அந்த GIFஇல் நீங்கள் அழகாய் இருக்கீறர்கள் என சமாளிக்கும் விதமாக ட்வீட் செய்தார். இந்தப் பதிவைக் கண்ட அலியா பட் ஆச்சரியமடைந்துள்ளார். இருப்பினும், கிப்ஸின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக பவுண்ட்ரி சிக்னல் தரும் GIF-ஐ பதிவு செய்தார் அலியா பட்.

ட்விட்டரில் அலியா பட்டை நடிகைனு எனக்கு தெரியாது என கிப்ஸ் போட்ட ட்வீட்டால் சமூகவலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கிப்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 90 டெஸ்ட், 248 ஒருநாள், 23 டி20 போட்டிகளில் விளையாடி, 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.