ETV Bharat / sports

பிசிசிஐ தேர்தலில் பங்கேற்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தடை?

author img

By

Published : Oct 10, 2019, 11:55 AM IST

Updated : Oct 10, 2019, 1:03 PM IST

மும்பை: பிசிசிஐயின் புதிய சட்டத்திட்டங்களை முறையாகப் பின்பற்றாத காரணத்திற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட மூன்று மாநில கிரிக்கெட் சங்கங்கள் பிசிசிஐ தேர்தலில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

bcci

இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐயின் நிர்வாகிகளுக்கான தேர்தல் மற்றும் ஆண்டு பொதுக்கூட்டம் வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிது. இந்நிலையில், இந்தத் தேர்தல், பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களின் கிரிக்கெட் சங்கங்கள் பங்கேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழு கமிட்டியின் தலைவர் வினோத் ராய், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநில கிரிக்கெட் சங்கங்கள் பிசிசிஐயின் புதிய சட்டங்களைக் கடைபிடிக்கத் தவறிவிட்டன. இதனால் அந்த மூன்று சங்கங்களும் பிசிசிஐ தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது என்பதை குறிப்பிட்டு அதன் நகலை பிசிசிஐ தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைத்தார். மேலும் விதிமுறைகளுக்கு கீழ்படியாமல் இருந்ததே கமிட்டியின் இந்த முடிவுக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அலுவலர், நிர்வாகக் கமிட்டி மற்றும் பிசிசிஐ தேர்தல் அலுவலர்களின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். எங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 10, 2019, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.