அபுதாபியில் டி10 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், நேற்று நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் மரத்தா அரேபியன்ஸ் - கலந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மரத்தா அரேபியன்ஸ் அணி 10 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 30 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஆறு சிக்சர் என 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் ஒரு ரன்னிலேயே ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
இதைத்தொடர்ந்து, 120 ரன்கள் இலக்குடன் விளையாடிய கலந்தர்ஸ் அணி ஒன்பது ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்திலிருந்த இவன்ஸ் 20 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
-
Marvellous Maratha Arabians! Fighting Qalandars! The power of T10.#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #marathaarabians pic.twitter.com/rMLTS6smtw
— T10 League (@T10League) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Marvellous Maratha Arabians! Fighting Qalandars! The power of T10.#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #marathaarabians pic.twitter.com/rMLTS6smtw
— T10 League (@T10League) November 23, 2019Marvellous Maratha Arabians! Fighting Qalandars! The power of T10.#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #qalandars #marathaarabians pic.twitter.com/rMLTS6smtw
— T10 League (@T10League) November 23, 2019
இறுதியில் கலந்தர்ஸ் அணி 10 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை எடுத்ததது. இதனால், மரத்தா அரேபியன்ஸ் அணி இப்போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.