ETV Bharat / sports

பவுலிங் பயிற்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்!

இங்கிலாந்து கிரிக்கெட்  அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் தற்போது அந்த அணியின்  தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Chirs Silverwood
author img

By

Published : Oct 7, 2019, 8:53 PM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்தத் தொடர் முடிந்த கையொடு, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் பதவியிலிருந்து விலகினார். அவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி முதல்முறையாக சமீபத்தில்தான் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன், இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களான அலெக் ஸ்டீவர்ட், கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். கேரி கிறிஸ்டன் தலைமையின் கீழ்தான் இந்திய அணி 2011 உலகக்கோப்பை தொடரை வென்றது. இதனால், அவரைதான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

4679916
கிறிஸ் சில்வர்வுட்

ஆனால், நடைபெற்ற நேர்காணில் கிறிஸ் சில்வர்வுட் சிறப்பாக செயல்பட்டதால், அவரையே இங்கிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ட்ரெவர் பேலிஸ் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பதவி வகித்தபோது, கிறிஸ் சில்வர்வுட் அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

44 வயதான அவர் இங்கிலாந்து அணிக்காக 1996 முதல் 2002வரை மொத்தம் ஆறு டெஸ்ட், ஒரேயொரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். அவரது பயிற்சியின்கீழ் எசெக்ஸ் அணி 2017 கவுன்டி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரின்மூலம் அவரது பயிற்சியாளர் பதவிக்காலம் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க:113 வருஷத்துக்குப் அப்பறம் இப்படி ஒரு மோசமான சாதனை இந்த ஆஷஸ்லதான் நடந்துச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.