உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய அணி விளையாடிவரும் ஒருநாள், டி20 போட்டிகளில் தோனிக்குப் பதிலாக ரிஷப் பந்த் விளையாடிவருகிறார். தோனியின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் என்னவோ கடந்த சில போட்டிகளில் ரிஷப் பந்த் ஏதேனும் தவறு செய்தால், மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் தோனியின் பெயரை அதிகம் கூச்சலிட்டு அவருக்கு ஒருவிதமான அழுத்தத்தை தருவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், தோனியின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ரிஷப் பந்திற்கு பேராதரவு கிடைத்தது நெட்டிசன்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கே.எல். ராகுல், கேப்டன் கோலி, ரோஹித் சர்மா என டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவந்தது. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் ஆகியோர் தங்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
குறிப்பாக, ரிஷப் பந்த் 69 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 71 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். இதனிடையே அவர் பேட்டிங் செய்தபோது, மைதானத்திலிருந்த சென்னை ரசிகர்கள் 'ரிஷப் பந்த் ரிஷப் பந்த்' எனக் கரகோஷம் எழுப்பி அவருக்கு ஆதரவு தந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இப்போட்டி முடிவடைந்த பிறகு தனக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ரிஷப் பந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்தச் செயலின் மூலம், மீண்டும் சென்னை ரசிகர்கள் தாங்கள் கிரிக்கெட்டின் அறிவு சார்ந்த ரசிகர்கள் (Knowledgeable Crowd) என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
-
Finally Everyone is shouting Rishabh Pant instead of Dhoni. #KnowledgeableChennaiCrowd pic.twitter.com/mCHLrQzotB
— Sundar G (@SunOfGan) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Finally Everyone is shouting Rishabh Pant instead of Dhoni. #KnowledgeableChennaiCrowd pic.twitter.com/mCHLrQzotB
— Sundar G (@SunOfGan) December 15, 2019Finally Everyone is shouting Rishabh Pant instead of Dhoni. #KnowledgeableChennaiCrowd pic.twitter.com/mCHLrQzotB
— Sundar G (@SunOfGan) December 15, 2019
இதையும் படிங்க: கங்குலி மீண்டும் அழைக்கப்பட்டிருந்தால் அது பாகிஸ்தானின் சிறந்த வெற்றியாக மாறியிருக்காது - சேப்பாக் டெஸ்ட் ரீவைண்ட்