ETV Bharat / sports

ஓய்வுக்கு பிறகு பயிற்சி கொடுங்கள்-  தோனியிடம் சிறுவன் கோரிக்கை! - மூன்றாவது அம்பயரை திட்டிய ரசிகர்

சென்னை: இந்திய வீரர் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றவுடன் பயிற்சியாளராக மாற வேண்டும் என ஐபிஎல் போட்டியில் மூன்றாவது நடுவரை வசைபாடிய சிறுவன் கோரிக்கைவிடுத்துள்ளான்.

ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் கோச்சிங் கொடுங்கள்-  தோனியை வலியுறுத்தும் சென்னை சிறுவன்!
author img

By

Published : Jul 30, 2019, 10:29 AM IST

கிரிக்கெட்டில் 'தல' என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரது ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் தோனிக்கு தவறாக ரன் அவுட் கொடுக்கப்பட்டதற்கு, சென்னையைச் சேர்ந்த சிறுவன் கிருதிக்கேஷ் மூன்றாவது நடுவரை திட்டி வசைபாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. தோனியின் 'டை ஹார்டு' ரசிகனாக விளங்கும் அச்சிறுவனிடம் தோனியின் ஓய்வு குறித்து நாம் பேட்டி எடுத்தோம். அவற்றின் கேள்வி-பதில் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: தோனி ஏன் ஓய்வுபெறக் கூடாது?

  • பதில்: தோனி இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார். அவர் முக்கியமான வீரர். அவர் இந்திய அணியிலிருந்து ஓய்வுபெற்றால் அணிக்குதான் பெரிய இழப்பு.

கேள்வி: தோனிக்கு பிறகு இளம் வீரர்கள் வருகை தந்தால் அது அணிக்குதானே நல்லது?

  • பதில்: தோனி ஓய்வுக்குப் பிறகு பல புதிய வீரர்கள் வருவது நல்ல விஷயம்தான். ஆனால் தோனியை போல் எல்லோராலும் ஆகமுடியாது. கிரிக்கெட் என்றாலே தோனிதான். நீங்க யார் ஃபேன் அப்படின்னு கேட்டால் நிறைய பேர்... 'நான் தோனி ஃபேன்' என்றுதான் சொல்வார்கள். அவர் இருந்தால்தான் இந்திய அணி பவர்ஃபுல்லாக இருக்கும். அவர்போல் வருவது கஷ்டம்தான்.

கேள்வி: தோனியின் ஃபேனாக இந்த உலகக்கோப்பையில் அவரது ஃபார்ம் குறித்து உங்கள் கருத்து?

  • பதில்: தோனி இந்த உலகக்கோப்பை போட்டியில் சற்று தடுமாறினார். சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவர் ஃபார்ம் அவுட் என்று சொல்ல முடியாது. இறுதிப் போட்டியில் தோனி ஆடுகிறார் என்று நாம் டிவியை ஆன் செய்யும் நிலை வரும். சில தொடர்களில் அவர் முதலில் சரியாக ஆட மாட்டார். ஆனால் இறுதிப் போட்டியின்போது அவர் ஃபார்முக்கு வந்துவிடுவார்.
    தோனியின் ரசிகர்

கேள்வி: தோனி ஓய்வு அறிவித்தால் உங்களது மனநிலை எப்படி இருக்கும்?

  • பதில்: தோனி ஓய்வு முடிவை அறிவித்தால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்திய அணியில் தோனி தவிர விராட் கோலி, சாஹல், பும்ரா ஆகியோரை பிடிக்கும். கோலியை விட தோனிக்கு கேப்டன்சியில் அதிக அனுபவம் இருக்கிறது. அவர் கேப்டன் கூல்!

கேள்வி: தோனி ஒருவேளை உங்க வீட்டுக்கு வந்தா உங்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?

  • பதில்: தோனி, என் வீட்டுக்கு வந்தால் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன். பின்னர் ஏன் ஓய்வு எடுத்தீர்கள்? நீங்கள் இல்லாமல் கிரிக்கெட் பார்க்கவே பிடிக்கவில்லை என்று சொல்வேன். இந்திய அணியை பார்க்கவே பிடிக்கவில்லை என்று சொல்வேன்.
    தோனி

கேள்வி: தோனி ஓய்வுபெற்றால் நீங்க கிரிக்கெட் பார்க்கமாட்டீர்களா?

  • பதில்: அப்படி இல்லை. தோனி அணியில் இருந்தால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். இன்றைய போட்டிகளில் கோலி அவுட் ஆனால் கூட தல தோனி இருக்கிறார் என்று கெத்தாக இருக்கலாம். ஆனால், அவர் ஓய்வுபெற்றால் அந்த நம்பிக்கை இருக்காது.

Intro:Body:சென்னை/விஜய்/சிறப்பு செய்தி

ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் கோச்சிங் கொடுங்கள்

தோனியை வலியுறுத்தும் சென்னை சிறுவன்

கிரிக்கெட்டில் 'தல' என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் தோனிக்கு தவறாக ரன் அவுட் கொடுக்கப்பட்டது என்று சென்னையை சேர்ந்த சிறுவன் மூன்றாவது அம்பயரை திட்டி வசை பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தோனியின் டை ஹார்டு பேனாக விளங்கும் அந்த சிறுவனிடம் தோனியின் ஓய்வு குறித்து கேட்டபோது:

தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெறுவது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்பு. அவர் ஒரு முக்கியமான வீரர். அவர் இந்தியாவுக்காக பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

டோனி ஓய்வுக்குப் பிறகு பல புதிய வீரர்கள் வருவது நல்ல விஷயம் தான் ஆனால் தோனி போல் எல்லோராலும் ஆகமுடியாது. கிரிக்கெட் என்றாலே தோனிதான். யாரைக் கேட்டாலும் தோனி பேன் என்றுதான் சொல்வார்கள். அவர் இருந்தால்தான் இந்திய அணி பவர்ஃபுல்லாக இருக்கும். அவர் போல் வருவது கஷ்டம்தான்.

மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவது நல்லது தான் என்று சொல்ல முடியாது. தோனி ஓய்வு குறித்து அறிவித்தால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்திய அணியில் தோனி தவிர வேறு யாரையும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. விராட் கோலி நல்ல பேட்ஸ்மேன், சாஹால் நல்ல ஸ்பின்னர், பும்ரா நல்ல பவுலர். ஆகையால் தோனி தவிர்த்து இவர்களை பிடிக்கும். கோலியை விட தோனிக்கு கேப்டன்சியில் அதிக அனுபவம் இருக்கிறது. விராட் கோலி பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருந்த போதிலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் தோனி கேப்டனாக இருந்த சென்னை அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. தோனி தான் சிறந்த கேப்டன் என்று சொல்வேன். தோனி இந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு மாதிரியாகத்தான் ஆடுகிறார். ஆனால் இறுதிப் போட்டியில் தோனி ஆடுகிறார் என்று நாம் டிவியை ஆன் செய்யும் நிலை வரும். சில மேட்சுகளில் முதலில் தோனி சரியா ஆட மாட்டார் ஆனால் இறுதிப்போட்டியில் நன்றாக ஆடுவார் ஐபிஎல்லில் கூட 70 டன் கண்டிப்பாக எடுத்து இருப்பார் ஆனால் தவறாக அவுட் கொடுத்துள்ளனர். டோனி இன்னும் வேகமாக ஷாட் அடித்தால் கேட்ச் அவுட் ஆகாமல் சிக்ஸ் போகும். வயதான பிறகும் அவர் அதிக மேட்சுகளில் நன்றாக விளையாடி வெற்றியை தேடித் தந்துள்ளார்.
குறிப்பாக ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடி உள்ளார். சில மேட்சுகளில் சரியாக ஆடவில்லை என்று அவர் ஃபார்ம் அவுட் என்று சொல்ல முடியாது.
டோனி ஒருவேளை என் வீட்டுக்கு வந்தால் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் பின்னர் ஏன் ஓய்வு எடுக்கிறீர்கள், நீங்கள் இல்லாமல் கிரிக்கெட் பார்க்கவே பிடிக்கவில்லை என்று கேட்பேன். நீங்கள் இன்றி இந்திய அணியை பார்க்கவே பிடிக்கவில்லை என்று சொல்வேன். இன்றைய மேட்சுகளில் கோலி அவுட் ஆகிவிட்டால் கூட தல தோனி இருக்கிறார் என்று கெத்தாக இருக்கலாம் ஆனால் அவர் ஓய்வு பெற்று விட்டால் அது இருக்காது. டோனி ஓய்வுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக போடலாம் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது தினேஷ் கார்த்திக் போட்டால் நன்றாக இருக்கும். பேட்டிங் வரிசையில் ஹர்திக் பாண்டியா சேர்க்கலாம். ஆனால் தோனி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ஒருவேளை தோனி ஓய்வு பெற்று விட்டால் அவர் ஒரு கிரிக்கெட் கோச்சிங் சென்டர் ஆரம்பிக்க வேண்டும் அதில் நான் சேர வேண்டும் இதுதான் எனது கோரிக்கை. அப்படி ஆரம்பித்தால் நான் மட்டுமல்ல அனைவரும் அதில் வந்து சேர்வார்கள். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், அணியை வழிநடத்தும் திறன் ஆகியவை பிடிக்கும். அவர் எப்பொழுதும் கூலாகவே இருப்பார். என்றார்.
Visual are sent by mojoConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.