நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் வென்றபின், இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வழக்கம்போல் தனது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை இட்டுள்ளார்.
ஒவ்வொரு போட்டி முடியும்போதும் சாஹல் வெளியிடும் 'சாஹல் டிவி' காணொலி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட்டடித்துள்ளது. இதனால் சாஹலுக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான ரசிகர்கள் சாஹலின் சேட்டைகளுக்காகவே அவரைப் பின்தொடர்ந்துவருகின்றனர்.
இதனிடையே நேற்றையப் போட்டியின் முடிவிற்கு பின், சாஹல் டிக் டாக்கில் காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்தக் காணொலியில் சாஹல், ஸ்ரேயாஸ், கடைசியாக சிவம் தூபே இடம்பெற்றுள்ளனர். மூன்றாவது வீரராக ஒருவர் தனது முகத்தை மறைத்து இடம்பெற்றுள்ளார்.
-
Off field performance on point 🕺 pic.twitter.com/2LRswnVWNs
— Yuzvendra Chahal (@yuzi_chahal) February 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Off field performance on point 🕺 pic.twitter.com/2LRswnVWNs
— Yuzvendra Chahal (@yuzi_chahal) February 1, 2020Off field performance on point 🕺 pic.twitter.com/2LRswnVWNs
— Yuzvendra Chahal (@yuzi_chahal) February 1, 2020
இதனால் ரசிகர்களிடையே யார் அந்த வீரர் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிலர் சஞ்சு சாம்சன் என்றும், சிலர் ஜாதவ் என்றும் கூறுகின்றனர். ஆனால் யாரென நிச்சயமாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது.
இதனால் சாஹல் தனது அடுத்த காணொலியில் யார் அந்த வீரர் எனக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வில்லியம்சனுடன் நேரம் செலவிட்டதை வாழ்வில் மறக்கமுடியாது...!