அரசுமுறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலானிய ட்ரம்ப் ஆகியோர் இந்தியா வருகைதந்துள்ளனர். நேற்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ட்ரம்ப், இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை புகழ்ந்து பேசினார்.
ஆனால் அவர் சச்சினின் பெயரை உச்சரிக்கும்போது ‘சூச்சின் டெண்டுல்கர்’ என உச்சரித்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் ட்ரம்பை சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகின்றனர். அதேபோல் ஐசிசியும் தனது ட்விட்டர் பக்கத்தில் 15 வினாடி காணொலி ஒன்றை வெளியிட்டு அதில் சச்சின் என்பதற்குப் பதிலாக சூச்சின் என மாற்றுவது போன்று சித்திரிக்கப்பட்டு வெளியிட்டது.
-
How are you today Sue Chin @sachin_rt !!!! #😂 #DonaldTrumpIndiaVisit
— Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">How are you today Sue Chin @sachin_rt !!!! #😂 #DonaldTrumpIndiaVisit
— Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2020How are you today Sue Chin @sachin_rt !!!! #😂 #DonaldTrumpIndiaVisit
— Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2020
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகனும், சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப்பை விமர்சிக்கும் குழுவில் இணைந்துள்ளார். ஏனெனில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தான் சென்று, அந்த அணியின் கிரிக்கெட் வீரரான ஃபக்கர் ஸமான் பெயரை உச்சரிப்பதைக் கேட்க ஆவலுடன் இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
-
Can’t wait for @realDonaldTrump to visit Pakistan & see how he pronounces Fakhar Zaman ..!!!
— Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Can’t wait for @realDonaldTrump to visit Pakistan & see how he pronounces Fakhar Zaman ..!!!
— Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2020Can’t wait for @realDonaldTrump to visit Pakistan & see how he pronounces Fakhar Zaman ..!!!
— Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2020
தற்போது மைக்கல் வாகனின் ட்விட்டர் பதிவானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: "நமஸ்தே ட்ரம்ப்" - சச்சின், கோலியைப் புகழ்ந்த அமெரிக்க அதிபர்!