ETV Bharat / sports

IND vs AUS: டெஸ்ட் தொடரிலிருந்து புக்கோவ்ஸ்கி விலகல்! - கார்த்திக் தியாகி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரண்மாக ஆஸ்திரேலியாவின் வில் புக்கோவ்ஸ்கி விலகினார்.

Burns cleared for second Test, Pucovski ruled out

author img

By

Published : Dec 20, 2020, 5:45 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இத்தொடரின் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றியை பெற பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

புக்கோவ்ஸ்கி விலகல்

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்தில் ஆஸ்திரேலியாவின் வில் புக்கோவ்ஸ்கி தலையில் காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு ஒன்பது கட்டங்களாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

வில் புகோவ்ஸ்கி
வில் புகோவ்ஸ்கி

இதையடுத்து தொடரின் முதல் போட்டியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவரது நிலை இன்னும் சீரடையாததால், இத்தொடரிலிருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

பர்ன்ஸ் உறுதி:

அதேபோல் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது பும்ரா வீசிய பந்தில் காயமடைந்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஜோ பர்ன்ஸ்
ஜோ பர்ன்ஸ்

தற்போது அவரது காயம் குணமடைந்துள்ளதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இருப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவரது ஸ்கேன் பரிசோதனை முடிவுகளை பொறுத்தே உறுதியான முடிவு அறிவிக்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பீலேவின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.