ETV Bharat / sports

டிரெண்ட் போல்டிடம் முதலிடத்தைத் தாரை வார்த்த பும்ரா - நியூசிலாந்து தொடரில் கோலி அடித்த ரன்கள்

ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலிருந்த இந்திய வீரர் பும்ரா இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதால், நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Bumrah slips to second place, Trent Boult becames new number one bowler

author img

By

Published : Feb 12, 2020, 5:42 PM IST

மோசமான ஃபார்மில் பும்ரா

ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் தலைசிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்பவர் இந்திய வீரர் பும்ரா. ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் முதலிடத்திலிருந்தும், அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தாமல் இருந்தார்.
Bumrah loses top spot
பும்ரா

இந்தத் தொடரில் 30 ஓவர்களில் 164 ரன்களை வழங்கினார். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்துமுடிந்த, மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவர் ஒரு விக்கெட்டையும் எடுக்காமல் இருந்தார். இதன்மூலம், தொடர்ந்து நான்கு ஒருநாள் போட்டிகளில் 240 பந்துகள் (40 ஓவர்கள்) வீசி, அவர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும்.

முதலிடத்தை இழந்த பும்ரா:

இதன் விளைவாக, ஐசிசி இன்று வெளியிட்ட பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலிருந்த அவர் 719 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால், இரண்டாவது இடத்திலிருந்த நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில், ஆப்கானிஸ்தானின் முஜிப் உர் ரஹ்மான், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் ஆகியோர் முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

பேட்டிங்கில் சொதப்பினாலும் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்ட கோலி:

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழக்க கேப்டன் கோலியின் அவுட் ஆஃப் பார்மும் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ரன்மெஷினாக புகழப்படும் அவர் இந்தத் தொடரில் ஒரு அரைசதம் உட்பட 74 ரன்களை மட்டுமே எடுத்தார். பேட்டிங்கில் அவர் சொதப்பினாலும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 869 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
Kohli
கோலி

அவருக்கு அடுத்தப்படியாக இந்திய வீரர் ரோஹித் சர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 829 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

ஜடேஜா முன்னேற்றம்:

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு அரைசதம் உட்பட 63 ரன்களும் பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்திய வீரர் ஜடேஜா, ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி, ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேசமயம், இப்பிரிவில் முதலிடத்திலிருந்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால், இரண்டாவது இடத்திலிருந்த ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதையும் படிங்க: 'பும்ராவின் ஒவ்வொரு பந்தும் மிகப்பெரிய அச்சுறுத்தல்தான்' - வில்லியம்சன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.