ETV Bharat / sports

யார் சிறந்த பேட்ஸ்மேன்: விராட் - ஸ்மித்; பிரெட் லீ பதில்...! - ஸ்டீவ் ஸ்மித்

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ பதிலளித்துள்ளார்.

brett-lee-picks-the-best-between-virat-kohli-and-steve-smith

author img

By

Published : May 26, 2020, 4:56 PM IST

கிரிக்கெட் விளையாட்டில் சமகாலத்தில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இடையே எப்போதும் ஒப்பீடுகள் நடப்பது சகஜம். ஆனால் இந்த ஒப்பீடுகள் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்க தொடர்ந்துகொண்டே இருக்கும்.

சமகாலத்தில் யார் சிறந்த வீரர்கள் என்பதில் விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் இடையே அதிகமாக ஒப்பீடுகள் நடக்கிறது. இந்த கேள்விக்கு கிட்டதட்ட அனைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பதிலளித்து வருகின்றனர்.

விராட் கோலி,
விராட் கோலி

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ-யுடன் ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் பொம்மி பாங்வா இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அதில் விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யார் சிறந்த வீரர்கள் என பிரெட் லீயிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரெட் லீ, ''இருவரில் ஒருவரைத் தேர்வு செய்வது கடினமான ஒன்று. விராட் கோலி டெக்னிக்கலாக சிறந்த வீரர். மிகச்சிறந்த கேப்டன்.

ஆனால் ஸ்டீவ் ஸ்மித் கடந்த இரண்டு வருடங்களில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டார். ஒவ்வொரு முறையும் அவர் களத்தில் இறங்கும்போது ஒரு எனர்ஜி வருகிறது. அதனால் நான் ஸ்டீவ் ஸ்மித்தைதான் கூறுவேன்.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

டான் பிராட்மேனுடன் ஸ்டீவ் ஸ்மித்தை ஒப்பிட்டு வருகிறார்கள். அவர் அடிக்கும் ரன்கள் பேசுகிறது'' என்றார்.

இதையும் படிங்க: விராட், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருக்கு இணையான வீரர் பாபர்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.