ETV Bharat / sports

‘மெக்கல்லம் கிரிக்கெட்டிற்கு கிடைத்த பரிசு’ - கேன் வில்லியம்சன்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம் கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைத்த பரிசு என அந்த அணியின் தற்போதைய கேப்டன் வில்லியம்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Brendon McCullum was gifted in his approach to the game: Kane Williamson

author img

By

Published : May 22, 2020, 11:27 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கின்றனர். இந்நிலையில் பெரும்பாலான வீரர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் வங்கதேச அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பாலுடன், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபேஸ்புக் நேரலை மூலம், இணைந்து கலந்துரையாடினர். அப்போது பேசிய கேன் வில்லியம்சன், தனது அணியின் முன்னாள் கேப்டனான மெக்கல்லம் இவ்விளையாட்டிற்கு கிடைத்த பரிசு என புகழாரம் சூட்டினார்.

இதுகுறித்து பேசிய வில்லியம்சன், மெக்கல்லம் சில நேரங்களில் டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டியை போன்றும், ஒருநாள் போட்டியை டி20 போட்டியைப் போன்றும் நினைத்து விளையாடுவார். அவரின் விளையாட்டானது எங்களது அணிக்கு பெரும் வெற்றிகளைப் பெற்று கொடுத்தது. அவர் இந்த விளையாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் பரிசு என்று பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வருந்தும் கோலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.