பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து ஏமாற்றமளித்தது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி முதல் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
பாக்ஸிங் டே டெஸ்ட் குறித்து பர்ன்ஸ்
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் ஜோ பர்ன்ஸ், "கடந்த ஆட்டத்தில் வென்றதைப் போலவே பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என எதிர்பார்த்துள்ளோம். இருப்பினும் இந்திய அணி இப்போட்டியில் வெற்றியை பெற கடுமையாக போராடும் என்பது எங்களுக்கு தெரியும். அதேசமயம் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் இத்தொடரின் விதியை தீர்மானிக்கும்.
மேலும் இந்திய அணியிலிருந்து முகமது ஷமி, விராட் கோலி ஆகியோர் இல்லாமல் இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இருப்பினும் அவர்களிடம் சிறந்த வீரர்கள் இருப்பதால், இப்போட்டி நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோல்டன் ஃபுட் விருதை வென்றார் ரொனால்டோ!