ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் மெல்போர்னில் இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜோ பர்ன்ஸ் ரன் ஏதுமின்றியும், மேத்யூ வேட் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த மார்னஸ் லபுசாக்னேவும் 48 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
-
💥 Jasprit Bumrah 4/56
— ICC (@ICC) December 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
💥 R Ashwin 3/35
Ravindra Jadeja claims Pat Cummins' wicket to bowl Australia out for 195!
What a performance from the India bowlers 🙌#AUSvIND SCORECARD 👉 https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/ZsrVLMTJdp
">💥 Jasprit Bumrah 4/56
— ICC (@ICC) December 26, 2020
💥 R Ashwin 3/35
Ravindra Jadeja claims Pat Cummins' wicket to bowl Australia out for 195!
What a performance from the India bowlers 🙌#AUSvIND SCORECARD 👉 https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/ZsrVLMTJdp💥 Jasprit Bumrah 4/56
— ICC (@ICC) December 26, 2020
💥 R Ashwin 3/35
Ravindra Jadeja claims Pat Cummins' wicket to bowl Australia out for 195!
What a performance from the India bowlers 🙌#AUSvIND SCORECARD 👉 https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/ZsrVLMTJdp
அந்த அணியில் அதிகபட்சமாக லபுசாக்னே 48 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தடுமாற்றத்தில் இந்தியா
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - புஜாரா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை எடுத்துள்ளது.
-
India finish the day on 3⃣6⃣ for the loss of only one wicket 😀
— ICC (@ICC) December 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Shubman Gill remains unbeaten on 28 with Cheteshwar Pujara on 7* 🏏
📝 #AUSvIND SCORECARD: https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/LsXAVnYGsH
">India finish the day on 3⃣6⃣ for the loss of only one wicket 😀
— ICC (@ICC) December 26, 2020
Shubman Gill remains unbeaten on 28 with Cheteshwar Pujara on 7* 🏏
📝 #AUSvIND SCORECARD: https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/LsXAVnYGsHIndia finish the day on 3⃣6⃣ for the loss of only one wicket 😀
— ICC (@ICC) December 26, 2020
Shubman Gill remains unbeaten on 28 with Cheteshwar Pujara on 7* 🏏
📝 #AUSvIND SCORECARD: https://t.co/bcDsS3qmgl pic.twitter.com/LsXAVnYGsH
இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் 28 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கவுள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: வில்லியம்சன், டெய்லர் அதிரடியால் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து!